பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

நா.வானமாமலை


இலக்குவனிடம் 'எங்கே போகிறாய்?' என்று கேட்கிறாள். அவன் மெளனம் சாதிக்கிறான். முகத்தில் சோகம் துன்பக் கண்ணிராகிக் கண்களை மறைக்கிறது. சீதைக்கு எங்கே போகிறோம் என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. நடுக்காட்டில் அவளை விட்டுவிட்டு இலக்குவன் திரும்பும்போது அவள் விஷயம் 'தெரிந்துகொள்கிறாள். சக்கரவர்த்தியின் மனைவிகூடப் பிறன் மனை புகுந்து சிறிது காலம் வாழ்ந்தவள் தானே? நான் தகப்பன் வீட்டில்தானே இருந்தேன்?' என்று ஒரு வண்ணாத்தி சொன்னாளாம். வண்ணான் 'இராமனைப் போல என்னையும் தினைத்தாயோ?' என்றானாம். சக்கரவர்த்தி பற்றிய தாய்மையான படிமத்தில் கறை படிந்துவிட்டதாம். எனவே ராமன் காட்டுக்கு அனுப்பத் தீர்மானித்து விட்டான். இலக்குவன் கண்ணிர் மல்க அயோத்திக்குத் திரும்பி விடுகிறான். இப்போது தட்டிக் கேட்க ஆளில்லை.

இச்சம்பவம் பற்றிச் சீதை சிந்திக்கிறாள். இம்முறை வண்ணானுடைய பழிச்சொல் தனது இரண்டாம் முறை வன வாசத்திற்குக் காரணமாகிவிட்டது. வண்ணானா காரணம்? இல்லை. இராமனுடைய சக்கரவர்த்தித் தன்மை அவனுடைய மனிதப் பண்புகளை முற்றிலும் அழித்துவிட்டது. அவள் ராமனுடைய சிசுவைத் தன்னுள் தாங்கிக் கொண்டிருக்கிறாள். ஆயினும் சக்கரவர்த்திப் படிமம் மாசுபட்டுவிட்டது என்று கருதிய ராமன் நிரந்தரமாகவே அவளைத் துறக்கத் தீர் மானித்துவிட்டான். வனவாச காலத்து ராமனுக்கும் சக்கரவர்த்தி ராமனுக்கும் மனப்போக்கிலும் கண்ணோட்டத்திலும் எவ்வளவு வேறுபாடு? இந்த மாற்றத்திற்குக் காரணம் சக்கரவர்த்திப் பதவி. இப்பதவிக்காக வாழ்கிற ராமனுக்குச் சொந்தமாகச் சிறந்த உணர்ச்சிகள் இல்லையா? சிந்தனைகள் ஒன்று கூடஇல்லையா? சீதை உன்னத மனிதனான ராமனை நேசித் தாள். வனவாச காலத்தில் அவனுக்கு உன்னத மனிதப் பண்புகள் இருந்தன. இப்போது சக்கரவர்த்திப் பண்புகள் அவற்றை விரட்டிவிட்டன. அவன் சக்கரவர்த்தியாகப் பிறர் மதிக்க வாழ்வதற்காக, தன் செயல்கள் மனைவியின் உள்ளத்தை எவ்வாறு பாதிக்கும் என்று சித்திக்காத, உணர்ச்சியற்ற ஒரு கணவனோடு இவள் எப்படி வாழமுடியும்? ராமன் பாரதத்தின் சக்கரவர்த்தியாக இருப்பதைவிட தன்னுடைய அன்புமிக்க கணவனாக, தனக்குப் பிறந்த குழந்தைக்குத் தந்தையாக, மக்கள் நேசிக்கும் நண்பனாக இருக்கவேண்டும் என்று சீதை விரும்புகிறாள்.

இப்போது வான்மீகரும் சீதையின் பிள்ளைகளும் திரும்பி வந்துவிட்டார்கள். அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி குதிபோடு