பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்

21


கிறது. அவளையும் அழைத்துவர ராமன் சொன்னதாக வான்மீகி சொல்லுகிறார். அவளுடைய பதிலுக்குக் காத்திராமலே அவர்கள் பர்னசாலைக்குப் போய்விடுகிறார்கள்.

இப்போது சீதை நாளை என்ன நடக்கும் என்று வருங்காலம் பற்றிச் சிந்திக்கிறாள். கடந்த காலம் பற்றிச் சிந்தித்து, குழம்பி ஒரு முடிவுக்கு வந்த சீதை இப்போது பழைய சீதைவல்ல. அவள் பழைய 'கற்பின் கனலி'யாக இருந்திருந்தால் இராமன் வரச்சொன்னதை எண்ணி அவளது மனம் மகிழ்ச்சியால் துள்ளியிருக்கும். மனத்தில் இன்ப உணர்ச்சி வெள்ளம் பெருகிப்பாய்ந்திருக்கும் இவளோ 'சிந்தா விஷ்டயாய சீதை'.

இவள் மறுநாள் ராமனைச் சந்திக்கப்போகும் நிகழ்ச்சி பற்றிச் சிந்திக்கிறாள். வான்மீகரோடும் லவகுசர்களோடும் இவள் ராமன் முன்னிலையில் நிற்பாள். ராமன் தனது பிள்ளைகளை முகமலர்ந்து தன்னருகே அழைப்பான். தன்னைப் பார்க்கும்போது அந்த மகிழ்ச்சி மறைந்து முகம் கடுமையாகிவிடும். சிறிது நேரத்திற்குப் பின், வான்மீகரை அழைத்து அக்கினிப் பரிட்சை பற்றிக் கூறுவான். சக்கரவர்த்தித் தன்மையின் புனிதத்தைக் காப்பாற்றிக்கொள்ள விரும்புவான். அப்போது அவள் என்ன செய்வாள்? இரண்டாம் முறையும் அக்கினிப்பரிட்சையில் தேறி சக்கரவர்த்தியின் மனைவியாக, இளவரசர்களின் தாயாக வாழ விரும்புகிறாளா அவள்? தனக்கென்று ஒரு தனித்துவம் அவளுக்கு இல்லையா? இல்லையென்று நிரூபிக்கத் தயாராயிருந் தால்தான் அவளுக்கு வாழ்வும் பெருமையும் உண்டு. ஆனால் மாறிவிட்ட அவள் உள்ளம் பழைய மரபு வழியான 'கற்பினுக்கோர் அணிகலன்’ என்ற படிமத்தை ஏற்கத் தயார்தானா? 'இல்லை' என்ற முடிவுக்கு அவளுடைய சிந்தனை வருகிறது.

மறுநாள் லவகுசர்களை ஒரு புன்னகையோடு ராமன் வரவேற்கிறான். அவளைப் பார்க்கவே இல்லை. அவனுக்கு அக்கினிப்பரிட்சை நினைவு தோன்றுவதற்கு முன் சீதை தன் தாயான பூமியின் மடியில் தட்டுகிறாள். பூமி பிளந்து இடம் கொடுக்கிறது. சீதை துள்ளிக்குதித்து, தாயோடு ஐக்கியமாகிறாள்.

இந்த மலையாளக் கவிதை ஒரு புதிய சிந்தனைப் போக் கினை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது. மரபு வழியான நம்பிக்கையின்பாற்பட்ட 'கற்பு’ என்னும் மதிப்பை மனித உருவமாக்கிய சீதை இங்கு சிந்திப்பவளாக மரபை மீறிய முடிவுக்கு வருபவளாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறாள். இங்கு மனிதப்பண்புகள், பதவிப் பண்புகளோடு முரண்பட்டு வெற்றி பெறுகின்றன. பதவிக்கேற்றபடி தன் மனத்தை மாற்றிக்