பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்

23


கலைஞன் தீர்ப்பு

கதை, காப்பியம், ஒவியம் போன்ற கலைப்படைப்பில் கலைஞன் புற உலகம் அல்லது சமுதாயம் பற்றித் தனது கருத்துக்களை (தீர்ப்பு, செய்தி) மறைமுகமாக வெளியிடுவான். இது மிக முக்கியமானது. எழுத்தாளனது திறமைக்கு ஏற்ற முறையில் சம்பவங்களையும் கதை மாந்தர்களையும் பற்றித் தனது தீர்ப்பை எவ்வாறேனும் குறிப்பாகக் காட்டுவான். உபதேசம் செய்வதுபோலச் சொல்லுகிறவன் திறமையற்றவன். வாசகனுக்குச் சிந்திக்கத் தெரியாது என்று நினைக்கும் கர்வம் கொண்டவன். ஒரு பாத்திரம், ஆசிரியன் விரும்புவது போலவே செயல்படவேண்டுவதில்லை. கதை மாந்தர்கள், கதை நிகழ்ச்சிகள் இவற்றிலிருந்து வாசகன் முடிவுக்கு வரும்: முறையில் ஆசிரியன் கதைக் கருவையும் கதைப்பின்னலையும் கையாளவேண்டும்.

பெர்த்தோல்டு பிரெஷ்டு (Berthold Bresht) என்ற ஜெர்மானிய நாடக ஆசிரியரின் பாத்திரங்கள் ஆசிரியரின் அந்தராத்மாவாகப் பேசுவதில்லை. இவர் 'மதர் கரேஜ்’ (Mother Courage) என்றொரு நாடகம் எழுதியிருக்கிறார். இது 1914இல் நடந்த உலக யுத்தம் பற்றியது. யுத்தம் ஒரு தாயின் குடும்பத்தைக் கொடுமையாகப் பாதித்தது. 'மக்களின் நல்வாழ்வுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் நடைபெறும் போர் இது; உலகில் வருங்காலத்தில் போர்களே இல்லாமல் போக நடைபெறும் இறுதிப்போர்’ என்று அரசாங்கம் பிரச்சாரம் செய்தது. இதனை மக்கள் நம்பினார்கள். நமது கதைத் தலைவியும் நம்பி தனது பிள்ளைகளை ஒவ்வொருவராக ராணுவத்தில் சேர்க்கிறாள். ஒவ்வொருவராக யுத்த முனையில் மடிகிறார்கள். நான்கு பிள்ளைகளையும் இழந்து தாய் தனித்து நிற்கிறாள். இச்சோகமான அனுபவங்கள் யுத்தம் எதற்காக? என்ற கேள்வியை அவள் உள்ளத்தில் தோற்றுவிக்கிறது. விடை காணத் தவிக்கிறாள். குழப்பம்தான் மிஞ்சுகிறது. இப்படியே கடைசிவரை அவள் சிந்தித்து விடை காண முடியாமல் புத்திர சோகத்தால் வேதனைக்கடலில் ஆழ்ந்து செத்துப்போகிறாள்,

அவளுக்குத் தனது அனுபவங்களுக்குப் பொருள் கண்டு தெளிவடையச் சக்தியில்லை. ஒவ்வொரு மகனின் சாவுக் செய்தி வரும்போதும் துக்கத்தில் ஆழ்ந்து குழம்புகிறாள். மேன்மையான நோக்கங்களுக்காக நடைபெறும் யுத்தம் இது என்று மனதைச் சாந்தப்படுத்தித்கொள்கிறாள். ஒவ்வொருவராகத் தன் மக்கள் சாகும்பொழுது இந்த நம்பிக்கை அழிந்து போகிறது. இது ஏன் என்று சிந்திக்கிறாள். இதுதான் விதி