பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

நா.வானமாமலை


யென்று தன் உள்ளத்தைச் சமாதானப்படுத்திக்கொள்ள முயலுகிறாள். முடியவில்லை. பிள்ளைகளின் சாவு ஆழ்ந்த சோகத் தைத் தோற்றுவிக்கிறது. எந்த சமாதானத்தையும் அவள் மனம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தெளிவு காண முடியாமல் குழப்பத்திலேயே உழன்று சாகிறாள்.

இப்பாத்திரத்தால் சமூக அரசியல் நிகழ்ச்சிகளின் காரணத்தை அறியமுடியவில்லை. ஆனால் நாடகத்தைக் காண்பவன் நாடக முடிவில் தெளிவான முடிவுக்கு வந்துவிடுவான். கதாபாத்திரம் தனக்கு நேரும் துன்ப நிகழ்ச்சிகளுக்குப் பொருள் காண முடியவில்லை. ஆனால் நிகழ்ச்சிகளுக்கு வாசகன் பொருள் காணும் வகையில் அவற்றை நாடகத்தில் கலைப் படைப்பாக பிரெஷ்ட் திறமையாக உருவாக்கியுள்ளார். நாட கத்தின் மையக்கருத்து கலைப்படைப்பினுாடே வெளியாகிறது. இந்நாடக ஆசிரியர் தாம் வெளியிட விரும்பும் மையக்கருத்தை எந்தப் பாத்திரத்தின் மூலமும் எந்த நாடகத்திலும் வெளியிடு வதில்லை. நாடகம் காண்போர் பாத்திரங்களின் பேச்சுக்கள். செய்கைகள், சூழ்நிலை அமைப்பு முதலிய கலைப்படைப்புகளில் இருத்து ஆசிரியரின் மையக்கருத்தைப் புரிந்துகொள்கிறார்கள். ஆசிரியர் தாம் படைத்துக்காட்டும் உலகைப்பற்றித் தமது தீர்ப்பைச் சொல்லுவதில்லை. வாசகனையோ நாடகம் காண்பவனையோ தீர்ப்பளிக்கும்படி சொல்கிறார். லெனின் இதுபற்றி எழுதினார்:

குறுகிய மனம் படைத்த எழுத்தாளன்தான் வாசகனுக்குச் சிந்திக்கத் தெரியாது, அவனுக்குச் சிந்திக்கும் சக்தியும் கிடையாது என்று நினைத்துத் தன் கலைப் படைப்பில் தானே செய்தியை வெளியிடுவான். உண்மையான கலைஞன், வாசகனது புத்திக் கூர்மையை நம்புகிறான். அவனைச் சிந்திக்கத் துண்டுவான். முடிவுகளைப் பச்சையாகச் சொல்லமாட்டான்.

இப்படைப்பு முறையைத் தமிழ் எழுத்தாளர்களில் ஜெயகாந்தன் சிறுகதைகளிலும், இந்திரா பார்த்தசாரதியின் நாவல்களிலும் காணலாம். ஜெயகாந்தன் வாசகனைச் சிந்திக்கத் தெரிந்தவன் என்று நம்புகிறார். அவர் கதைகள் பலவற்றில் கதையின் பிரச்சினையில் தெளிவாக முடிவுக்குவர உதவும்படியான ஒரு கேள்வியைப்போட்டு முடித்துவிடுகிறார். கடைசி வரை ஒரு போக்கிலேயே சென்று வெற்றி பெற்றுவரும் கதாநாயகன் வாழ்க்கையின் கொடுமையான உண்மைகளைச் சந்திக்கும்போது தோல்வியடைகிறான். தோல்வி அவனைச் சிந்திக்கத் தூண்டுகிறது. மனித மதிப்புகளை உணர்ந்துகொள்