பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்

25


கிறான். அவன் பெற்ற தோல்விகளுக்குக் காரணம் என்னவென்று அறித்துகொள்ள இ. பார்த்தசாரதி தமது நாவலிலேயே, பல விவரங்களையும் பல போராட்டங்களையும் கதாபாத்திரங்களையும் சித்தரித்துக் காட்டிவிடுகிறார். இப்படி எழுத்தாளர்கள் வாசகனைப் பார்த்து, 'நீ முட்டாள்; உனக்கு ஒன்றும் புரியாது. நானே வெளிப்படையாகச் சொல்லித் தொலைக்கிறேன் கேள்’ என்ற மாதிரி பேசுவதில்லை. இதே நிகழ்ச்சிகள் இவை பற்றிக் கதை மாந்தர்கள் சிந்தனைகள், அவர்கள் உரையாடல்களில் வெளியாகிறது; செய்கைகளில் வெளியாகிறது. நீயே சிந்தித்து முடிவுக்கு வா’ என்று இவர்கள் சிந்தித்து எழுதுகிறார்கள். கலைத்திறமை மிக்க எழுத்தாளர்கள் வாசகன் சிந்தனையைத் தூண்டி வழிகாட்டி முடிவுகளுக்கு வர உதவும் முறையில் கதை நிகழ்ச்சிகளையும் பாத்திரங்களையும் படைக்கிறார்கள்.

ஒழுக்கபோதனையும் கலையும்

'கலைப்படைப்புகள் மூலம் ஒழுக்கத்தைப் போதிக்கிறேன்' என்ற எண்ணம் கலைப்படைப்பு என்ற கருத்துக்கே முரணானது. 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நிக்கோலாய் டோப்ரோ லியூபாவ் (Nicholai Dobrolyubov) என்னும் தத்துவ அறிஞர் ஒழுக்கத்தைப் போதிக்க விரும்பும் கலைப்படைப்புகளை எதிர்க்கிறார். அவர் கூறுகிறார் "கலைஞன் வாத்தியாராகக் கூடாது. அவன் பாதிரியாராகக்கூடாது. வாசகனைச் சிந்திக்கச் செய்ய வேண்டும்.” தம் காலத்துக்கு ஏற்ற மேன்மையான கருத்துக்களை மறைமுகமாக, கலைப்படிமங்களாகப் படைக்கவேண்டும். நிகழ்ச்சிகள், சிந்தனைப் போக்குகள் ஒழுக்க மதிப்புகளின் மாற்றங்கள் முதலியவற்றை, தமது கலைப் படிமங்களின் மூலம் வாசகனை உணரவைப்பவனே சிறந்த கலைஞன். தனது மையக்கருத்தை முதலிலேயே சொல்லிவிட்டு, அதை விளக்கி எழுதுபவன் சிறந்த கலைஞன் அல்ல. அதுபோல ஒரு பாத்திரத்தின் உள்ளத்தில் புகுந்துகொண்டு எழுத்தாளன் தனது கருத்துக்களையோ, ஒழுக்கம் பற்றிய சிந்தனைகளையோ வெளியிடும்போது அப்பாத்திரம் ரியலிசத் தன்மையை இழந்து விடுகிறது. இதுபோன்ற கலைப்படைப்புப் போக்கு தமிழகத்தில் சில எழுத்தாளர்களிடம் காணப்படுகிறது. இது ஒழுக்கப் பிரச்சாரக் கருவியாக, கலையைப் பயன்படுத்தும் போக்காகும். எந்தக் கருத்தையும், உணர்ச்சியோடு ஒன்றுபடுத்துவதே கலை. அன்பு, அனுதாபம், வெறுப்பு, உற்சாகம், கோபம், மகிழ்ச்சி முதலிய உணர்ச்சிகளின் வெளிப்பாடு மூலம் கதை மாந்தர்கள்