பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

நா.வானமாமலை


கருத்துகளுக்குத் தங்கள் ஏற்பு-எதிர்ப்புகளைக் காட்டவேண்டும். ஓர் ஒழுக்கக்கருத்தை ஒருவர் சொல்ல மற்றொருவர் எதிர்ப்பது போல பட்டிமன்றம் அமைத்துக்காட்டுவது கலைத் தன்மையற்ற படைப்பாகும். அல்லது ஒழுக்கத்தைப் பிரச்சாரம் செய்ய ஓர் அவதார புருஷனையோ ஆசிரியனையோ ஒழுக்கங் களின் முழுமையான உருவகமாக, மனித உணர்ச்சிகள் எதுவுமற்ற வறண்ட மனித நிழலாகப் படைத்து உலவவிடுவதும் படைப்பின் கவையொருமையைக் கெடுத்து, கலைத்தன்மையைக் குறைத்துவிடும்.

சிந்தனையும் உணர்ச்சியும்

கலைஞன் விரும்புகின்ற விளைவு ரசிகன் உள்ளத்தில் ஏற்படவேண்டும். இதனைத் திறமையாகச் செய்வதில்தான் கலைஞனது திறமை பயன்படுகிறது. கலையில் சிந்தனைகள் உணர்ச்சிக மாற்றப்பட வேண்டும். சிந்தனைகளை உணர்ச்சிகளாக மாத்த அறிவுக்கூறுகளையும் பாவக்கூறுகளையும் ஒன்று கூட்ட, கலைஞனுக்குத் திறமையிருந்தாகவேண்டும். கம்டன், டால்ஸ்டாய், கார்க்கி போன்ற மாபெரும் இலக்கியப் படைப்பாளிகளிடம் இத்தி திறமை வியக்கத்தக்க அளவில் காணப்படுகிறது. மிகச் சிறந்த கலைஞர்கள் உணர்ச்சி வழியாகவே சிந்தனையை நம் உள்ளத்தில் எழுப்புகிறார்கள். சிந்தனை அதிகமானால் வீங்கிய மனிதனும், உணர்ச்சி அதிகமானால் தலை சுருங்கிய மனிதனும் கலைப்படைப்பாகத் தோன்றுவார்கள்.

சிந்தனையாளர் கால்ஸ்வர்த்தியின் நாவல்களில் (ForsyteSaga, Moder Comedy) எல்லா வயது முதிர்ந்த பாத்திரங்களும் சிந்திப்பவர்களே. ஒரு சிறிய நிகழ்ச்சி குறித்து அவர்களுடைய சிந்தனை இருபது பக்கங்களுக்கு வருணிக்கப்படும். உணர்ச்சி வழியாகச் சிந்தனை மாற்றப்படாது. உணர்ச்சியற்ற மாந்தர்களாகத் தங்கள் சமூக வரம்பினுள் சிந்திக்கும் கதாபாத்திரங்களைக் கால்ஸ்வர்த்தி படைத்துள்ளார். அவருடைய படைப்பில் வயதில் இளைஞர்களாக உள்ளவர்கள் உணர்ச்சி மிக்கவர்கள்; சித்தனையில் குறைந்தவர்கள். இவர்களுடைய உணர்ச்சிகள் தங்களுடைய பெற்றோர்களின் சிந்தனைகளுக்கு: முரண்படுகின்றன. உணர்ச்சிமிக்க இப்பாத்திரங்கள் தங்கள் சமூகவரம்பை மீறி உணர்ந்து உணர்ச்சி வழியே சிந்தித்துச் செயல்படத் துடிக்கிறார்கள். மூன்று தலைமுறைகளின் நிகழ்ச்சிகளைச் சித்தரிக்கும் இந்த இரண்டு நாவல்களும் இப்போக்கை நன்றாகக் காட்டுகின்றன.