பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

நா.வானமாமலை

புத்துயிர்ப்பு (Resurrection) என்ற நாவலில் வரும் நெக்லியூடால் (Nekiyudov) என்ற இளைஞன் இத்தகையவன உயர்குடிப்பிறப்பும் உயர் கல்வியும் அவனது வசதிகள். தாய்தந்தையற்ற அவனை மிகவும் செல்லமாக அவனுடைய அததைகள வளர்க்கிறார்கள். மரபு வழியாக, நிலவுடைமைச் சமுதாயத தில் ஆண்மகனுக்குத் தேவை என்று கருதப்பட்ட பண்புகள அவனுக்கு இருந்தன. அவனுடைய அத்தையர் வீட்டில் வளரும் ஓர் அனாதைப் பெண்ணோடு (மாஸ்லோவா) அவன் நேசமாத இருக்கிறான். இத்தேசத்தின் குற்றமற்ற தூய்மையான தன்மையைப் பல பக்கங்களில் ஆசிரியர் வருணிக்கிறார். இங்கு கதாபாத்திரங்கள் சிந்தனை-உணர்ச்சி ஆகிய உளவியல் கூறுகளைச் சமமாகப்பெற்றுள்ளார்கள். அவன் கட்டாய ராணுவ சேவைக்குச் செல்லுகிறான். சில ஆண்டுகளில் ராணுவ முகாம்களில் பயிற்சி பெற்றுத் திரும்புகிறான். ராணுவ முகாமின் வாழ்க்கை அவனது மென்மையான உள்ளத்தைக் கடினமாக்கி விட்டது. பிறர் உணர்ச்சிகளை உணரமுடியாதவனாக்கி விட்டது. பிடிவாதமும் விலங்குணர்ச்சிகளும் அவனிடம் புகுந்துவிட்டன. இனி அவன் உணர்ச்சிகளால் துண்டப்படும் இளைஞன். சிந்தனை சுருங்கிப்போய் வீடு திரும்புகிறான். மாஸ்லோவா பழைய போக்கிலேயே வளர்ந்திருக்கிறாள். பெண்மைக் கவர்ச்சி, இளமைத்துடிப்பு, இவை அவளிடம் முன்பிலும் அதிகமாக நிரம்பி வழிகின்றன. வீடு திரும்பிய நேக்லியூடால் அவளிடம் முன்போலவே விளையாடுகிறான்; பிடித்து முத்தமிடுகிறான். ராணுவ முகாமுக்குச் செல்வதற்கு முன்பும் இப்படி நடந்ததுண்டு. இப்போது அவன் ஸ்பரிசம் அவளைச் சுடுகிறது. அவள் பயந்து விலகுகிறாள். இரவில் அவளுக்கு என்னவென்றே தெரியாத நிலையில் அவள் நலத்தை அவன் நுகருகிறான். பின் அவன் ராணுவசேவைக்குப் போய் விடுகிறான். அவள் கருவுற்ற அடையாளம் தெரிந்தவுடன் அத்தைமார்கள் அவளை விரட்டிவிடுகிறார்கள். அவள் ஒரு விபச்சார விடுதியில் சேர்க்கப்படுகிறாள். அவர்கள் குடும்பத்திற்கே கேவலம், குழந்தை பிறந்து சாகிறது. இவளிடம் ஒரு வியாபாரி வருகிறான். மறுநாள் காலை வியாபாரி பிணமாகக் கிடக்கிறான். மாஸ்லோவா கைது செய்யப்படுகிறாள். திருடுவதற்காக விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டாள் என்று குற்றம் சாட்டப்படுகிறாள்.

இதனை விசாரிக்கும் கோர்ட்டில் அவளைக் கற்பழித்த நெக்லியூடாவ் ஜூரராகப் பணியாற்றுகிறான். விசாரணையின் துவக்கத்தில் அவனுக்கு அவளை அடையாளம் தெரியவில்லை. பின்னர் அவளுடைய பேச்சு அங்க அசைவுகள் மூலம் அவளைத்