பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

நா.வானமாமலை


யும் இணைந்து சிந்தனையே உணர்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு வாழ்க்கையின் பல கூறுகளும் அவை உள்ளத்தில் வியாபிக்கும் உணர்ச்சிகளும் சித்தரிக்கப்பட்டுள்ளன.

மாஸ்லோவா ஊர் திரும்பும் காலம் நெருங்குகிறது. இவன் ஆசையை வளர்த்துக்கொள்கிறான். நான்கு வருட சிந்தனையும் அவளோடு ஏற்பட்ட நேசமும் அவனைப் புதிய மனிதனாக மாற்றியுள்ளன. வாழ்க்கை முழுவதும் தோழமையோடு வாழ அவன் முடிவு செய்கிறான். இந்தத் தோற்றத்தை வியக்கத்தக்க கலையுணர்வோடு டால்ஸ்டாய் வருணிக்கிறார்.

அவள் அத்தகைய மேன்மையான வாழ்க்கை தனக்குத் தகுதியானதல்ல என்று கருதினாள். நிலப்பிரபு நிலையில் அந்த வர்க்கத்தைச் சேர்ந்த தனது நண்பனோடு, அவனுக்கு மாசு ஏற்படும் விதத்தில் தன் வாழ்க்கையை அவனது வாழ்க்கையோடு பிணைத்துக்கொள் உணர்ச்சியும் சிந்தனையும் பண்பட்ட நிலையில் அவளது மறுப்பைக் கேட்டு அவன் அதிர்ச்சியடையவில்லை.

மாஸ்லோவா, நெக்வியூடாவின் வேண்டுகோளை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை? சைமன்சன் என்னும் புரட்சிக்காரரைப் பாதுகாக்க முடிவு செய்இருந்தாள். டாஸ்போர்ட் இல்லாத தாரணத்திற்காகச் சிறையில் சில ஆண்டுகள் அவர் வாடிக் கொண்டிருந்தார். அவரைக் கவனித்துக்கொண்டிருந்த மாஸ்லோவா அவரைப் பெரிதும் மதித்து அவரைப் பாதுகாக்க செய்தாள். அவர் தன்னோடு வாழும்படி அவளை வேண்டிக்கொண்டார்.

இவள் தனது தாயாருக்குத் தந்தையில்லாமல் பிறந்தவள். தனது நான்கு குழந்தைகளைக் கவனிக்காமல் சாக விட்டு விட்டு இவளை மட்டும் அத்தாய் வாழவிட்டாள். நெக்லியூடாவ் வீட்டிற்கு அவள் வந்து சேர்த்தாள். இப்பரம்பரைப் பிறப்பு அவள் மனதை உறுத்திக்கொண்டிருந்தது.

சைமன்சன் வீரம் மிக்கவர். ஜார் ஆட்சியை எதிர்த்துப் போராடியவர். அவரது வாழ்க்கை தியாக காவியம். சமூக வாழ்க்கையில் மிகவும் துன்பமுற்றவர்களுக்காக அவர் உள்ளம் உருகினார். விடுதலையடைந்த பின் அவர்களுக்காகச் சேவை செய்ய அவர் முடிவு செய்திருந்தார்.

நெக்லியூடாவோடு மாஸ்லோவா பேசினாள். "நான் எதை யோசிக்க இருக்கிறது? எங்கே விலாடிமிர் சைமன்சன் போகிறாரோ அங்கே நான் அவரோடு போவேன்.” "உண்மையாகவா?"