பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்

31


"ஆம்" அவள் அச்சத்தால் தன் பேச்சை மாற்றிக் கொண்டாள்". அவர் தன் அருகில் இருக்கவேண்டுமென்று விரும்புகிறார். வேறு என்ன ஆசைப்பட எனக்கு இருக்கிறது? இதை மகிழ்ச்சியாகவே நான் கருதுகிறேன். எனக்கு வேறு என்ன வேண்டும்?”
நெக்லியூடாவ் சிந்தித்தான்.
"இரண்டில் ஒன்று, அவள் சைமன்சனைக் காதலிக்கிறாள். என்னுடைய தியாகங்கள் அவளுக்குத் தேவையில்லை. அல்லது என்னை இன்னும் காதலிக்கிறாள். ஆயினும் நான் நானாக இருப்பதாலேயே என்னைத் துறந்து விட முடிவு செய்திருக்கிறாள். என்னைக் கைவிட்டுவிட்டு சைமன்சனோடு தனது வருங்காலத்தை இணைத்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறாள்.”
"நீ அவரைக் காதலிக்கிறாயா?”
"காதலோ இல்லையோ அதைப்பற்றி என்ன? அந்தக் காலம் எல்லாம் போய்விட்டது. சைமன்சன், அசாதாரண மான மனிதர்.”
"ஆம் அது உண்மைதான்.”
"நெக்லியூடாவ், நீங்கள் விரும்புகிற மாதிரி என்னால் நடக்கமுடியவில்லை. அதற்காக நீங்கள் என்னை மன்னித்துவிடவேண்டும்.” ஆழம் காணமுடியாத தனது கண் களில்நன்றி ததும்ப அவள் நெக்லியூடாவைப் பார்த்தாள். "இப்படித்தான் நான் முடிவு செய்யவேண்டும். நீங்களும் வேறு வாழ்க்கையைத் தேடிக்கொள்ளவேண்டும்.”
“எனக்குத் துன்பமில்லை. இந்த வாழ்க்கை எனக்கு நல்லதாகத்தான் இருந்தது. உனக்குப் பணி செய்வதிலேயே என் வாழ்க்கையைக் கழித்துவிட முடியுமானால் மகிழ்ச்சியடைவேன்.”
"எங்களுக்கு, ஆம் எங்களுக்கு எதுவுமே தேவையில்லை. கடவுள் உங்கள் கணக்கைத் தீர்ப்பாராக.” கண்கள் கண்ணீரால் ஒளிவீச அவள் விடை பெற்றுக்கொண்டாள்.
நெக்லியூடாவிற்கு அன்றிரவு ஒரு புதிய வாழ்க்கை ஒளிபரப்பி உதயமாயிற்று. புதிய நிலமையினுள் அவன் நுழைந்துவிட்டான் என்பதனால் அல்ல. அந்த இரவுக்குப் பின் அவள் செய்ததில் எல்லாம் ஒரு புதிய வேறுபட்ட அர்த்தம் விளங்கியது. இந்தப் புதிய மாறுதல் எப்படி முடியும் என்பதைக் காலம்தான் நிரூபிக்கவேண்டும்.

எவ்வளவு அருமையாக டால்ஸ்டாய் பல வகைப்பட்ட வர்க்கப்பிரதிநிதிகளின் சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும்