பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

நா.வானமாமலை


சித்தரித்து, அவற்றின் போக்கில் அவ்வக்கதை மாந்தர்களின் வாழ்க்கைகளுக்குத் தீர்வு காண்கிறார்! இவ்வளவு வாவாக டால்ஸ்டாயின் நாவலை ஆய்வு செய்வதற்குக் காரணம், உணர்ச்சி, சிந்தனை ஆகிய இரு உளக்கூறுகளைக் கலைஞன் எப்படித் திறமையாகக் கலவை செய்து வாசகனைத் தனது கதை மாந்தர்களது உளப்போக்கில் ஈடுபடச் செய்திருக்கிறான் என்று காட்டுவதற்காகத்தான்.
சைமன்சன், நாவலின் கடைசியில்தான் சில பக்கங்களில் வருணிக்கப்பட்டாலும் மாஸ்லோவின் உள்ளத்தில் விசுவரூபம் கொண்ட மனிதனாக, தனக்கு நான்கு ஆண்டுகள் உதவி செய்வதற்காகவே சகல சுகங்களையும் துறந்து சைபீரியாவிற்கு வந்த நெக்லியூடாவைவிடச் சிறந்தவனாக, தனது உதவி தேவையாக இருக்கும் மாமனிதனாக அவன் காட்சியளிக்கிறான். நெக்லியூடாவிற்கும் ஒரு தனித்த இன்ப வாழ்க்கை வேண்டும் என்று அவள் விரும்புகிறாள்.
எத்தனை சிக்கலான கதைமாந்தர்கள் சமூக இயக்கப் போக்கில் உருவானதை டால்ஸ்டாய் படைத்துக் காட்டுகிறார்.எத்துணை ஆழமான சமூக ஆய்வும் உளவியல் ஆய்வும், அவருடைய படைப்புப்படி மக்களுக்கு மூலமாக இருந்துள்ளன. அவருடைய சமயக் கொள்கைகளின் பாதிப்பு கலைப்படைப்பில் சிறிதும் தாக்கம் பெறவில்லை. நெக்லியூடாவ் கடைசியில் மத்தேயூவின் சுவிசேஷ வாசகங்களைப் படிக்கிறான். உளவியல் நிகழ்ச்சிகள் மூலம் பண்பட்டுப்போய் மாறுதலையடைந்தபின் தான் அவற்றைப் படிக்கிறான. அவை அவனுடைய உளவியல் அனுபவ முடிவுகளை உறுதிப்படுத்துகின்றனவே அன்றி அவனுடைய நிகழ்ச்சிப்போக்கை (role) பாதிக்கவில்லை. அவனுடைய உளவியல் மாற்றம் ஒரு புதிய பொருளை பைபிள் வாசகத்துக்கு அளிக்கிறது. அவனுடைய நான்காண்டுகள் வாழ்க்கையனுபவமும் தவறுக்குப் பொறுப்பேற்கும் பண்பும் ஒரு நாள் செய்தி தவறினால் பாதிப்புக்குள்ளான பெண்ணின் வாழ்க்கைக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்ற உறுதியான விருப்பமும்: வேறு எந்த போதனையின் தலையீடும் இல்லாமலேயே ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கவேண்டும் என்ற உறுதியை அவனுக்களிக்கின்றன. இயற்கைக்கு அதீதமான சக்தியின் தலையீடு எதுவும் மதபோதனையின் தலையீடு எதுவும் கதை மாந்தர்களின் லெளகீக, ஆன்மீக வாழ்க்கையில் இல்லை. அவருடைய தத்துவக் கொள்கையான கிறிஸ்துவின் வாழ்க்கையும் போதனைகளும் (கிறிஸ்தவத் திருச்சபையின் போதனைகள் அல்ல) டால்ஸ்டாயின் மனித வாழ்க்கைச் இத்திரத்தில் இடம் பெறவில்லை. ஒரு மாபெரும் கலைஞனின்