பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

நா வானமாமலை


களில் காணப்பட்டன. இவை பழைய போக்குகளுக்கு மாறாகப் படிப்படியாக மாறிவந்து மார்லோ, ஷேக்ஸ்பியர் நாடகங்களுக்குப் பாதையமைத்தன. மார்லோவும் ஷேக்ஸ்பியரும் கதைப்பின்னலைப் பெரிதும் வளப்படுத்தினர், பண்டைய கிரேக்க நாடகங்களில் இருந்து தங்கள் பொதுக் கருவைப் பெற்று, கதைப்பின்னலைத் தாங்களே படைத்தார்கள். Miracle plays சமய உணர்வுமிக்க படித்தவர்களது மரபாயிருந்தது. புதியபோக்கு மக்கள் மரபாக உருவாயிற்று. ஆலயங்களில் தோன்றிய நாடகங்கள் பொதுவிடங்களை நோக்கி தகர்ந்தன. சமஸ்கிருத நாடகங்களும் இப்போக்கிலேயே உருவாயின. சமயவாதிகள் நாடகத்தையே ஆதரிக்கவில்லை. அரசுகள் ஆதரித்தன. அரசு ஆதரவுக் கருத்துப் படிப்படியாக அரசு எதிர்ப்புக் கருத்தாக உருவாயிற்று. இக்கருத்துக்கள் கதைப் பின்னல்களாக உருவாயின.
சகுந்தலையும் மிருச்சகடிகாவும் சமயச் சார்பற்ற நாடகங்கள். மேகதுரதம் மனிதக் காதலைப் பற்றியது. இவ்வுலகில் இருந்து மனிதன் ஆன்மாவைப் பரலோகத்துக்கு இழுக்கும் போக்கை எதிர்த்து இவ்வுலகில் இன்பம் இருக்கிறதென்ற வாழ்க்கை உடன்பாட்டுக் கொள்கையைக் கவிஞர்கள் பரப்பினார்கள். இதுபற்றி ஆல்பர்ட் சுவைட்லர் சொல்லுகிறார்: "இந்தியத் தத்துவ நூல்களில் பெரும்பாலானவை உலக மறுப்பையும் வாழ்க்கை மறுப்பையும் கொள்கையாகக் கொண்டவை. ஆனால் இந்திய இலக்கியமோ உலக உடன்பாட்டையும் (World affirmation) வாழ்க்கை உண்மையையும் கலைப் படைப்பு மூலம் மக்களிடம் விளக்குகின்றன.”

கதைக்கரு மாற்றம்

கதைக் கருத்தைப் பண்டைய கவிஞர்களின் படைப்பிலிருந்தோ பழைய நாட்டார் கதைகளில் இருந்தோ எடுத்துக் கொண்டு கதைப்பின்னலின் கருத்துக்கு முரணான புதிய கருத்தை வலியுறுத்தும் போக்கு பெர்த்தோல்ட் பிரஷ்ட் என்ற ஜெர்மன் நாடகாசிரியரின் கலை உத்தியாகும். பழங்கதைகளில் தாயையும் தாயாக நடிப்பவளையும் பிரித்தறியக் குழந்தையைப் பிடித்து இழுத்து யார் பக்கம் குழந்தை போகிறதோ அவளுடையதுதான் குழந்தை என்று நீதிபதி தீர்ப்பு வழங்குவார். போலித் தாய் வலுவாகக் குழந்தையை இழுப்பாள். தாயோ குழந்தையை விட்டுவிட்டு எப்படியேனும் குழந்தை உயிரோடிருந்தால்போதும் என்று சொல்லுவான். நீதிபதி உண்மையான தாய் இவள்தான் என்று தீர்ப்புக்