பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்

41


சொல்லுவார். இக்கதை இந்தியாவில் தோன்றியது. இது பெளத்த சமயம் சீனாவிற்குப் பரவியபோது அங்கு பரவியது. அக்கதையில் நீதிபதி குழந்தையின் தாய் என்று அழைத்துக் கொள்ளும் இருவரையும் அழைத்து ஒரு வெள்ளை வட்டம் வரைந்து அதனுள் குழ்ந்தையை இருக்கச்செய்து இருவரில் முதலில் யார் வட்டத்திற்கு வெளியே அதனை இழுத்துகிறாளோ அவளே தாய் என்று தீர்ப்புச் சொல்லுகிறார். போலித்தாய் வலுவாக இழுக்கிறாள். உண்மையான தாய் இழுக்க மறுத்து குழந்தையைப் போலித்தாயிடமே கொடுத்து விடும்படி வேண்டிக்கொள்கிறாள். இக்கதைகள், தாயின் உள்ளம் 'குழந்தை வாழவேண்டும் என்று நினைக்கும்; அத் தன்மையான் எண்ணம் தாயாக இல்லாதவளுக்கு இராது' என்ற கருத்தை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளன.
பிரெஷ்ட் கதையை மாற்றி முதன்மைக் கருத்தையும் மாற்றினார். ஒரு கற்பனையான நாட்டில் மக்கள் ஆளுநரை எதிர்த்துக் கலகம் செய்து அவரைச் சிறைப்படுத்துகின்றனர். கவர்னரின் மனைவி தான் தப்பியோடுவதற்காகத் தயாரிப்புச் செய்கிறாள். விலை உயர்ந்த உடைகள், அணிகலன்கள், வண்டிகள், குதிரைகள், நாற்காலி மேஜைகள் எல்லாவற்றையும் தேடி எடுத்து வண்டிகளில் ஏற்றும்படி வேலையாட்களுக்குக் கட்டளையிடுகிறாள். அவள் தன் குழந்தையை மறந்துவிட்டாள். தப்பியோடும்வரை அவளுக்கு அதன் நினைப்பே இல்லை. ஒரு வேலைக்காரி குழந்தையைக் காப்பாற்றுகிறாள். காவலர்கள் கேட்கும்பொழுது தனது குழந்தையென்றே சொல்லிவிடுகிறாள். தப்பிச்சென்று தன் அண்ணன் வீட்டையடைகிறாள். குழந்தையைக் கண்டதும் திருமணம் ஆகாமல் பெற்ற பிள்ளை என்று நினைத்து அண்ணன் அவளைத் தன் வீட்டிற்குள் அனுமதிக்க மறுக்கிறான். இரண்டு ஆண்டுகள் இவள் துன்பங்களை அனுபவித்துக் குழந்தையைக் காப்பாற்றுகிறாள். குழந்தை வளர்ப்புத் தாயையே, பெற்ற தாயென்று நம்புகிறது. இப் போது சொந்த நாட்டில் ஆட்சி மாறுகிறது. 'நாட்டைவிட்டு ஒடியவர்களுக்கு அவர்கள் விட்டுச்சென்ற சொத்துக்கள் கிடைக்கும்; ஆனால் வாரிசுகளைக் கொண்டுவரவேண்டும்’ என்ற ஆணை பிறப்பிக்கப்படுகிறது. இதனையறிந்த ஆளுநரின் மனைவி தன் குழந்தை நினைவு வந்து தேடத்தொடங்குகிறாள். தேடிக்கொண்டு வரும்பொழுது, குழந்தையை வளர்க்கும் தன்னுடைய பழைய வேலைக்காரியைக் காண்கிறாள். அவளிடம் குழந்தை இருக்கிறது. தாய் தான் பெற்ற உரிமையைச் சொல்லிக் குழந்தையைக் கேட்கிறாள். வளர்த்தவள் குழந்தையைப் பிரிய மறுக்கிறாள். குழந்தைக்காகத் தான்பட்டி