பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

நா வானமாமலை


கருத்தும் கதைப்பின்னலும் ஒன்றாக இருப்பினும் பல உருவங்கள் ஒரே கருவை ஏற்றுக்கொள்ளுகின்றன,
ஜானாபானிஸ் எழுதிய 'பெர்ஸிபியனின் தாய்’ என்ற காப் பியத்தை மாரஸின் கீவிஸ் என்ற சிற்பி கண்ணாடியில் ஓவியமாக வரைந்தார். ஒவியத்தின் தலைப்பு இரத்தமும் சாம்பலும் என்பது.
ஒரே கலைக்கருவே இரு வேறு கலையுருவங்களில் படைக் கப்பட்டுள்ளது. கதை நாஜிகளின் கொடுமைகள் பற்றியது. அவர்கள் கிராமங்களை எரித்து மக்களைத் தீயில் எறிந்தார்கள். கிராமங்கள் முழுமையாக அழிக்கப்பட்டன. இந்த அழிவை ஓவியம் உணர்த்துகிறது. ஓவியமும் காப்பியமும் வெவ்வேறு கூறுகளில் அழுத்தம் கொடுக்கின்றன. ஓவியம் மனித சோகத்தை வெளியிடுகிறது. உணர்ச்சிமிக்க வாழ்க்கையின் கட்டங்களில் மனிதன் விசுவரூபமெடுக்கிறான் என்று ஓவியம் குறிப்பிடுகிறது. கல்லில் செதுக்க முடியாதவையும் திரையில் வரைய முடியாதவையுமான சில வாழ்க்கைக் கூறு கிளைக் காப்பியம் சொல்லுகிறது. மக்களது வாழ்க்கையின் பரந்த களத்தைச் சொற்களால் காவியம் எழுதிக்காட்டுகிறது பாரதி, கம்பன் கவிதையின் வல்லமையை விளக்கும்போது அவனது கவிதை எல்லையில்லாத் தன்மையை அளந்து காட்டுகிறது என்று கூறினார். அதுபோலவே மக்களின் வாழ்க்கையின் பல கூறுகளையும் அவற்றின் தோற்றத்திற்குரிய காரணங்களையும் காப்பியம் கூறுகிறது. நாடகப் பண்பு வாய்ந்த வரலாற்றுக் காலத்தில் அவர்கள் செயல்பட்ட முறைகளை விளக்குகிறது. நெடுந்துயரம் நிறைந்த நாட்களில் துன்பத்திற் குள்ளானோர் தம்மிடையே கொண்டிருந்த உறவுகளைச் சித்த சிக்கிறது. சிலர், ரத்தம் சிந்துவதைத் தவிர்க்கவேண்டும்: என்ற நல்லெண்ணத்தில் தங்கள் தேசங்களுக்குத் துரோகம் செய்து அழிந்துபோனதையும் காப்பியம் விரிவாகச் சொல்லுகிறது.
விரிவான களத்தையும் நிகழ்ச்சிகளையும் பிரித்துக் காட்டச் சொல் கருவியாகிறது. சொல்லற்ற கலைகள் சிறுகதை போல ஒரு கண நிகழ்ச்சியைத்தான் ஓவியமாக்க முடியும். சிற்பமும் ஓவியமும் பேசா காப்பியம் பேசும். கதைமாந்தர்கள் வாசகனோடு உறவாடுவார்கள். எனவே காப்பிய ரசிகன் கதைமாந்தர்களோடு உணர்ச்சியில் ஒன்றிப்போகிறான்.
ஆளுமையின் கூறுகள் எவை? வாழ்க்கையைக் கூர்ந்து நோக்குவதும் அதன் அடிப்படையில் வாழ்க்கை பற்றிய பொதுக் கருத்துகளைப் படைத்தலுமே இக்கூறுகள். இவ்விரு கூறுகளும் எல்லாக் கலைகளுக்கும் பொதுவானவை.