பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்

61


தனி நிகழ்ச்சிகளை உற்றுநோக்கிப் பொதுமையான கருத்துக்களுக்கு வருவது "கலைப்பொதுமை" என்றழைக்கப்படும். 'அலிடெட் மலைக்குப் போகிறான்' என்ற நாவலில் 1921ஆவது ஆண்டின் நிகழ்ச்சிகள் வருணிக்கப்படுகின்றன. அப் போது இயற்கை மனிதன் மீது ஆதிக்கம் செலுத்தி வந்தது. அதன் பின்னர் சங்கிலித்தொடர் போல ஏற்பட்ட மாறுதல் கள் மனிதன் இயற்கை மீது ஆதிக்கம் செலுத்தும் திறமையைத் தோற்றுவித்தன. பழமை மாறிப் புதுமை தோன்றியது.










உருவத்தில் மட்டுமே ஆர்வம் கொண்ட ஒரு படைப்பாளி தனது கலைத் திறமையை, தத்துவப் பிரச்சினைகளுக்கும் அழகியல் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப் பயன்படுத்தாமல் உருவம் படைப்பதிலேயே செலவழித்தால் அவனுடைய திறமை வற்றி வறண்டு அழிந்து போகும். சமூகம் பற்றிய அறிவும் அவை தோற்றுவிக்கும் உணர்ச்சிகளும், உள்ளடக்கமாக அதனை வெளியிடும் பொருத்தமான உருவமும் சேர்ந்து பிறப்பதே கலைப்படைப்பு.