பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

நா வானமாமலை


உள்ளடக்கம் உயிர் உருவம் உடல். இவ்விரண்டிற்கும் உள்ள தொடர்பு போல் உள்ளடக்கமும் உருவமும் தொடர்பு கொண்டவை. உள்ளடக்கம் இல்லாத உருவம் உயிரற்ற உடல் போன்றது. உருவமற்ற உள்ளடக்கம் உடலற்ற உயிர் போன்றது:
இரண்டும் சேர்ந்து வெளிப்படும்போதுதான் மனித உள்ளத்தைக் கவர்ந்திழுக்கிற கலைப்படைப்புப் பிறக்கிறது. இது ரசிகனின் அறிவு வளர்ச்சி நிலையை உயர்த்துகிறது. படைப்பாளியின் கலை உலகம் ரசிகனின் கலை உலகாக மாறுகிறது. கலை உலக ஆர்வம் புற உலகை மாற்றும் வலுமிக்க ஆற்றலாக வளர்ச்சி பெறுகிறது. உலக மக்களின் பொது நோக்கமான "புதியதோர் உலகம் செய்வோம்" என்ற ஆர்வத்தை நிறைவு செய்யக் கலை கைகொடுக்கிறது.