பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

நா.வானமாமலை


இனக்குழு மக்கள் தங்கள் பண்பாட்டு நிலையிலும் பேச்சு வழக்கிலும் பண்டைய முற்கால மக்களை ஒத்திருக்கின்றனர். என்பது மானிடவியலார் யூகித்துள்ள ஒரு நியதி. இதனை விளக்க ஜூலு நாடு (Zulu tand) என்ற ஆப்பிரிக்க நாட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நேரில் கண்ட ஒர் ஐரோப்பிய கிறிஸ்தவ தேவ ஊழியர் ஒருவரது கூற்றை இங்கு மேற்கோள் காட்டுவோம்.
சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னர், ஜூலு நாட்டில் புதிதாக ரயில் பாதை அமைத்தார்கள். நாகரிகம் அடையாத ஜூலு மக்கள் பலர் ரயில் பாதை அமைக்கக் கூலிவேலை செய்யப் பாதைபோடும் இடங்களில் குழுமினார்கள். பலர் அரங்கங்களில் தொழில் புரிந்தார்கள். காட்டு வாழ்க்கையி லிருந்து முற்றிலும் மாறிய நகர வாழ்க்கைக்கு அவர்கள் வந்தார்கள். சில ஆண்டுகளில் பல தீமைகளுக்கு அவர்கள் உள்ளானார்கள். இனக்குழு மக்களாக வாழ்ந்து வந்த அவர்கள் தங்கள் உழைப்பை வெள்ளை முதலாளிகளுக்கு விற்று வாழத் தொடங்கினார்கள். அது மட்டுமன்று. ஜூலு மங்கையரின் கற்பும் விலை பேசப்பட்டு முதலாளிகளால் வாங்கப்பட்டது. ஜூலு இளைஞர்கள் தங்கள் மனைவியரையும் சகோதரிகளையும் இழந்தார்கள். இதற்குக் காரணம் முதலாளித்துவச் சுரண்டலும் கூலி அடிமை முறையும் என்றுணராது ஜூலு இளைஞன் ஒருவன் தடதடவென்று பேரோசை எழுப்பி வரும் ரயில்தான் தங்கள் உறவினரைத் தங்களிடமிருந்து பிரித்துத் தனிமையில் வாடச் செய்தது என்று நினைக்கிறான். ஓர் இளைஞன் ரயில் தன்னைக் கடந்து தண்டவாளத்தில் ஓடுவதைக் கவனிக்கிறான். அதன் ஓசை ஜூலு மக்கள் அவல திலையை அவனுக்கு நினைவூட்டுகிறது. தன் வாழ்க்கைத் துன்பத்தால் ஏற்பட்ட அவல உணர்ச்சியை ஒரு பாடலாக இசைக்கிறான். இது ஒரு முணுமுணுப்பாக ஐரோப்பிய சமய ஊழியருக்குக் கேட்கிறது. அவருக்கு ஜூலு மொழி தெரியும்.

தூரத்தில் உறுமிக்கொண்டு ஓடும் அரக்கனே!
எங்கள் பெண்களின் கற்பைச் சூறையாடும் கயவனே!
அவர்கள் எங்களைக் கைவிட்டு ஓடி நகரங்களிற்
சப்பட்டையாகிறார்கள்
அரக்கனே! கயவனே! தாங்கள் தனித்து நிற்கிறோம்

இவ்விளைஞன், காதல் குடும்பம், கூட்டு வாழ்க்கை இவற்றில் இன்பம் கண்டான். இந்த ரயில் அனைத்தையும் அழித்துவிட்டது. அவன், 'நல்லது', இன்பமளிப்பது என்று கருதிப் போற்றிய அனைத்தையும் அழித்துவிட்ட சக்தி ரயில். இது