பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

5


இக்கட்டுரைகளை நாவாவோடும் 'ஆராய்ச்சி'யோடும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவரும் 'நாவாவின் ஆராய்ச்சி' ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவருமான பேராசிரியர் டாக்டர் நா. இராமச்சந்திரன் (தற்போது தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரி, பாளையங்கோட்டை) அவர்கள் அழகாகவும் தெளிவாகவும் தம் கையால் படியெடுத்திருந்தார். இவக்கியத்தில் உள்ளடக்கமும் உருவரும் என்ற கட்டுரையின் படியுடன், நாவா அவர்கள் தம் கையால் எழுதிய மூலப்படியும் இருந்தது. நாவா அவர்கள் மறைவிற்கு முன்னர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் குமரி மாவட்டக் குழு சார்பில் சிவலோகம் எனுமிடத்தில் நடைபெற்ற இலக்கியப் பயிற்சி முகாமில் நாவா ஆற்றிய உரையின் குறிப்புகளே இவை.

அத்துடன், நாவா அவர்கள் கர்னாடகாவில் உள்ள தார்வார் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியியல் கழகத்தின் சார்பாக மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் ஆங்கிலத்தில் அளித்த நூலினைத் தழுவித் தமிழில் எழுதிய 'நாட்டார் வாழ்க்கையும் பண்பாடும்’ என்ற கையெழுத்துப் படியினையும் என்னிடம் அளித்துச் சென்றார்கள். இது நாவா இவர்கள் தம் கைப்பட எழுதியது. எதிர்பாராது கோர்பாவிலேயே பேரா. நாவா அவர்கள் மறைந்துவிட்ட துயரத்தையடுத்து, ' ஆராய்ச்சி ' இதழ்களை அச்சிடும் பொறுப்பினை 'நெல்லை ஆய்வுக்குழு' ஏற்றக் கொள்ள விழைந்தது. பேரா. ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களின் பொறுப்பில் தோழர்கள் ஆர். நல்லகண்ணு, எஸ். தோதாத்ரி, ஆ. சுப்பிரமணியன், கா. சுப்பிரமணியன், தி.சு. நடராசன், பொன்னிலன், (இவர்களோடு நானும் இருந்தேன்) ஆகியோரை ஆசிரியர் குழுவாகக்கொண்டு மூன்று இதழ்கள் வெளிவந்தன. அவற்றுள், சிறப்பிதழாக வெளியான நாவா வின் ஆராய்ச்சி இதழில் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற கட்டுரையும், 23, 24 எண்களைக் கொண்ட 'ஆராய்ச்சி' இதழ்களில் இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும் என்ற கட்டுரை இரு பகுதிகளாகவும் வெளியிடப்பட்டன.

இம்மூன்று கட்டுரைகளையும் மேலும் விரிவாக்கி, பெரும் நூலாக எழுதும் திட்டம் பேராசிரியருக்கு இருந்தது. அவரது மறைவினால் இது நிகழாதது பேரிழப்பாகவே அமைந்துவிட்டது. அத்துடன், அவர் என்னிடம் கொடுத்த படியில் துணைநூல் பட்டியல் இல்லாமையால் அதை முன்பு ஆராய்ச்சியிலும் தற்போது இத்தொகுப்பிலும் வெளியிட இயலவில்லை.

இவற்றைச் சிறு நூலாக வெளியிடவேண்டுமென்ற எண்ணம் இருந்தாலும், நாவா அவர்களின் முழுப்படைப்புகளை