பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

பதிப்புரை


யும் தொகுத்து வெளியிடும்போது இவற்றையும் சேர்த்துவிடலாம் என்ற எண்ணத்தில் காலம் கடந்துகொண்டேபோயிற்று. தொகுப்பு நூல் பணி தனியாக நடந்தாலும், பிறரும் பயன்படுத்துதற்கு வாய்ப்பாக, அவை கிடைக்கச்செய்யவேண்டுமென்ற நோக்கத்தில் முன்னிருந்தவாறே பல நூல்களையும் வெளியிட முடிவு செய்யப்பட்டது. அப்போது இம்மூன்று கட்டுரைகளையும் தனி நூலாக வெளியிடலாம் என்பதைப் பேரா. ஆ. சிவசுப்பிரமணியன், டாக்டர் சந்திரன் போன்றவர்கள் மிகவும் வரவேற்றார்கள்.

இதற்கிடையே, நாவாவின் படைப்புகளில் 'பிஎச்டி’ பட்டத்துக்கான ஆய்வுகளைச் செய்துவரும் மன்னார்குடி நண்பர் இரா.காமராசு அவர்களின் முன் முயற்சியில் 'நாவின் படைப்புகள்-நூலடைவு' வெளிவந்தது. நானும் பிற நாவா மாணவர்களும் செய்ய முனைந்த-செய்துவந்த பணிகளுக்கு முன்னோட்டமாக அமைந்த இச்சிறு தொகுப்பு நாவா அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளையும் கொண்டிருந்தது குறிப்பிடத் தகுந்தது. இந்த நூலடைவு முற்றுப்பெற்றதாக அமையவிட்டாலும் நண்பர் காமராசுவின் முயற்சி வேண்டிய பயனைத் தந்தது . இதில் இடம் பெறாத படைப்புகளை அறந்தவர்கள், மேலும் விவரங்கள் கூறுவதால், தொகுப்பு மேம்பட வாய்ப்புக் கிடைத்து வருகிறது.

இந்த நூலடைவில் காமராசு ' இலக்கியமும் உளவியலும்', 'இலக்கியமும் இலக்கியக் கல்வியும்’ என்ற இரண்டு கட்டுரைகளை சேர்த்து, இவை அச்சில் வராத கையெழுத்துப்படிளாக இருப்பதையும் சுட்டியிருந்தார்.

இதைக் கண்ணுற்றவுடன் நான், காமராசு அவர்களிடம் விவரம் வேண்டினேன். நாவா அவர்கள் தம் கைப்படவே எழுதியிருந்த இவ்விரு கட்டுரைகளையும் நூலடைவு வெளியான பின்னர் தமக்குக் கிடைத்த 'ஒட்டப்பிடாரத்தின் கிராம தெய்வங்கள்’ என்ற மற்றொரு கட்டுரையையும் உடனடியாகப் படிகளெடுத்து எனக்குக் கிடைக்கச்செய்ததுடன், இவை தமக்குக் கிடைத்த விவரங்களையும் காமராசு தெளிவுப்படுத்தியிருந்தார்.

'இலக்கிய உளவியலும்' மற்றும் 'இலக்கியமும் இலக்கியக் கல்வியும்' ஆகிய இரண்டும் பேரா. நா. இராமச்சந்திரன் அவர்களிடமிருந்து கிடைத்திருக்கின்றன.

இரண்டாவது கட்டுரைக்கு 'இலக்கியமும் இலக்கியக் கல்வியும்: வேறுபாடுகள்’ என்ற தலைப்பை நாவா அவர்கள் கொடுத்திருந்தார்கள்.