பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

7


நாவாவின் மாணவர்களில் ஒருவரும் தற்போது கோவையில் ஆசிரியப் பணியில் இருப்பவருமான நண்பர் திரு. ஜோதன் ராஜ் அவர்களிடமிருந்து, தோழர் பொன்னிலன் வழியாக 'ஒட்டப்பிடாரத்தின் கிராம தெய்வங்கள்' என்ற கட்டுரை காமராசுக்குக் கிடைத்திருக்கிறது.

கிடைத்த வழிகள், இக்கட்டுரைகளின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துகின்றன என்பதுடன், இவை மூன்றுமே நாவா அவர்களின் கைப்படவே எழுதப்பட்டிருக்கின்றன என்பதும் நோக்கத்தக்கது.

இதில் உள்ள இலக்கியம் தொடர்பான இரண்டு கட்டுரைகள் 'நாவாவின் ஆராய்ச்சி'யில் (எண்கள் 48, 49) வெளியிடப்பட்ட பின்னர், இந்நூலிலும் சேர்க்கப்பட்டுள்ளன. கிராம தெய்வங்கள் பற்றிய கட்டுரை அடுத்து வரும் 'நாவாவின் ஆராய்ச்சி'யில் (எண் 50) வெளியிடப்படுகிறது.

இவற்றுள், இலக்கியமும் உளவியலும், இலக்கியமும் இலக்கியக் கல்வியும் என்ற இரு கட்டுரைகளும் குறிப்புகளாகவே தென்படுகின்றன, பேராசிரியர் அவர்கள் இக்கட்டுரைகளையும் விரித்து எழுதவோ, நூலாக்கவோ எண்ணியிருக்க வேண்டும். இந்த வாய்ப்பையும் நாம் இழந்திருக்கிறோம். இக் குறிப்புகள் மிகச் சுருக்கமாக இருப்பினும், கட்டுரை வடிவில் வெளியிடத் தக்கவாறு அமைந்திருப்பதால் உள்ளது உள்ள வாறு வெளியிடத் துணிந்தோம்.

இந்நூலில் உள்ள கட்டுரைகளைப் படியெடுத்த-பாதுகாத்த நா. இராமச்சந்திரன் மற்றும் ஜோதன்ராஜ், தேடிப் பிடித்து அறிமுகப்படுத்திய இரா. காமராசு, பொன்னீலன் வெளியிட முயற்சிகள் மேற்கொண்ட ஆ. சிவசுப்பிரமணியன், பின்னிரு கட்டுரைகளைப் பிழையின்றிக் கொண்டுவர, நாவா அவர்களின் கையெழுத்தைப் புரிந்துகொள்ளத் துணைநின்ற வெ.கிருஷ்ணமூர்த்தி மந்தும் ஆராய்ச்சிக் குழுவினர் அனைவரின் ஒத்துழைப்புக்கும் அவர்களில் ஒருவனாக இருக்கும் நான் தெரிவிக்கும் நன்றியைவிட, முற்போக்கு இயக்கமும் ஆய்வு உலகமும் என்றென்றும் அவர்களுக்குக் கடமைப்பட்டிருப்பதே மிகப் பெருமை தருவதாகும்.

இன்று கலை, இலக்கியம் தொடர்பான பார்வைகளில் ஏற்பட்டுள்ள பல சிக்கல்களுக்கு இந்நூலில் இருக்கும் கட்டுரைகள் விளக்கங்களாக அமைந்திருக்கின்றன என்று கூறமுடியும்.

இலக்கியத்தில் உள்ளடக்கம் முதன்மை பெறவேண்டுமா அல்லது உருவம் முன்னிற்க வேண்டுமா என்ற வினாவில், மார்க்சிய அறிஞர் சிலரே மயக்கம் கொண்டுள்ள இன்றைய நிலையில், படைப்பு என்ற நோக்கில் இலக்கியம் பற்றிய