பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

நா.வானமாமலை


துத் தானியமாகவேண்டும் என்ற உணர்ச்சி மிக்க விருப்பத்தை வெளியிடுகிறது; தங்கள் ஆடல் பாடல்கள், அவற்றிற்குச் சம்பந்தமில்லாத விதை முளைத்து வளரும் இயற்கை நிகழ்ச்சிகளுக்குக் காரணம் என்று அவர்கள் நம்பிக் கனவு காணுகிறார்கள். புறவுலகு, இயற்கை நிகழ்ச்சிகளுக்குக் காரணம் என்று அவர்கள் நம்பிக் கனவு காணுகிறார்கள். புறவுலகு, இயற்கை விதிகளால்தான் இயங்குகிறது. ஆனால் இம்மக்களது உள்ளங்களில் புறவுலகு பற்றிய நோக்கு (attitude) மாறுகிறது. புறவுலகு தனது இயக்க விதிகளாலேயே இயங்குகிறது. ஆயினும் அவர்களது உள்ளங்கள், நம்பிக்கையால் உந்தப்பட்டு, விதை முளைத்துப் பயிராகி, தானியக்கதிர் தோன்றி அறுவடை செய்யும்வரை, பயிரைப் பாதுகாக்கும் தயார் நிலையை அடைகிறது. ஆடல் பாடல்கள் உள்ளத்தை மாற்றுகின்றன. இவ்வாறு புற நிகழ்ச்சியும் பாதிப்புப்பெறுகிறது. ஆடல் பாடல்கள் நேரடியாக விதை முளைப்பதைப் பாதிக்காவிட்டாலும் விதைப் பவனது மனத்தைப் பெரிதும் பாதிக்கிறது.
நான் பாம்புக்கடி மந்திரவாதி ஒருவரை சந்தித்துப் பழகினேன். அவருடைய நண்பரொருவர் எனக்கு நண்பர். அவர் மூலம் மந்திரவாதியும் எனக்கு நண்பராகிவிட்டார். சில நாட்களுக்குப் பின் பாம்புக்கடி மந்திரம் பற்றி நான் கேட்டேன். அவர் சொல்லியவற்றிலிருந்து நாம் முன்னர் கண்ட மந்திரசடங்குத் தொடர் இதிலும் இருப்பது தெரிந்தது. பாம்பு கடித்து மயக்க நிலையில் இருப்பவரை இவரிடம் கொண்டு வந்ததும், இவர் ஒரு துணியைக் கிழித்து 6 முடிச்சுகள், 9 முடிச்சுகள், 11 முடிச்சுகள் போடுகிறார். போடும்போதே பிறருக்குக் கேட்காதபடி ஒரு மந்திரத்தை முணுமுணுக்கிறார். அது என்ன சொற்கள் என்று கேட்டறிந்தேன்.

நாகேந்திரா, நாகேந்திரா
கருடபகவான் கருடபகவான்
வாரர் அங்கே வானத்திலே
ஓடிப்போ, ஓடிப்போ, ஓடிப்போ
திகு, திகு, திகு, திகு

பாம்பும் கருடனும் விரோதிகள் என்பது பாமர நம்பிக்கை. அவர் வருகையை அறிந்ததும் பாம்பு பயந்து ஒடிப்போய்விடும் என்று மந்திரவாதியும் மக்களும் நம்புகிறார்கள். அடுத்து ஒரு கட்டளையை மந்திரவாதி சொல்லுகிறார் ஓடிப்போ. இனி தெலுங்கில் திகு-இறங்கு என்று கட்டளையிடுகிறார்.
இங்கும், நம்பிக்கையும் மந்திரச் செயலும் இணைந்திருப்பதைக் காணுகிறோம். இதுவே பாடலாகிறது. இதுபோலவே