பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

69


தேள்கடி மந்திரம், எலிவிஷம் இறக்கும் மந்திரம் என்றெல்லாம் உள்ளன. அவையும் இவை போன்றவையே.
காடுகளின் மரங்களை வெட்டி வீழ்த்துவோர், மரத்தை விழச்சொல்லிப் பாடுகிறார்கள். மரத்தை வீழ்த்த கோடரி கொண்டு வெட்டுவது மட்டுமே போதும். மரத்தை விழச் சொல்லிப் பாடுவது அவசியமில்லை. ஆயினும், காரணமான இயற்கை நிகழ்ச்சியோடு, மந்திரச் செயலான பாடலும் இணைவது, நம்பிக்கையின் காரணமாகவேதான்.
இதிலிருந்து பாடல் மந்திரத்திலிருந்து தோன்றுகிறது என்ற உண்மை புலப்படுகிறது. ஆங்கில மார்க்சீய அறிஞர் ஜார்ஜ் தாம்சன், 'மந்திரத்திலிருந்து கவிதை வளருகிறது’ (Poetry grows out of magic. It imposes itiusion on reality) என்று கூறுகின்றார்.
இதை விளக்க ஷேக்ஸ்பியரின் 'ஸான்னெட்’ ஒன்றை (பதினான்க்டிச் செய்யுள்) உதாரணம் காட்டுவோம்.

No I am as constant as the northern star
Of whose true fixed quality
There is no feffow in the firmament

தனது நிலையான காதலைப் பற்றி ஒருவன் பேசுகிறான். அதன் நிலையான தன்மையைத் துருவ நட்சத்திரத்திற்கு ஒப்பிடுகிறான். இதுதான் Northern Star.

புறவுலகும் கனவுலகும்

இது ஒரே நிலையில் இருப்பதாக உலக மக்களுக்குத் தோன்றும் உவமை மூலம் இக்காதலன் நட்சத்திரமாக ஆகிவிடுகிறான். இந்த நட்சத்திரம் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் பளிச்சிடும் வானத்தில் உள்ளது. நிலைத்திருக்கும் தன்மையில் இதற்கொப்பான வேறு விண்மீன்கள் வானத்தில் இல்லை. இவ்வுவமை மூலம் கவிஞன், கற்பனைக் கனவில் வடமீனாகி, எல்லையற்ற வான நட்சத்திரங்களில் எதனோடும் ஒப்பிட முடியாத பொருளாகி மீண்டும் உலகிற்குத் திரும்பிவிடுகிறான். புறவுலக உண்மையிலிருந்து கனவுலகம் சென்று மீண்டும் உலகிற்கே திரும்பிவிடுகிறான். இந்த உளவியல் நிகழ்ச்சியைக் கீழ் வரும் குறியீட்டால் விளக்கலாம்:

கனவுலகு (Fantasy Dream world

புறவுலகு
புறவுலகு

(Reality)

(Reality)