பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

நா.வானமாமலை


கீட்ஸின்பாடல் ஒரு பாடல் மேலே குறிப்பிட்ட கருத்திற்கு உதாரணமாகும். ஓர் இளைஞன் தன் காதலியின் மார்பில் தலைசாய்ந்து இன்பத்தில் மூழ்கியிருக்கிறான். அப்போது அவன் இவ்வின்ப நிலை என்றும் நிலைத்திருக்கும் என்று கனவு காணுகிறான். நிச்சயமாக இந்நிலை சில வினாடிகளுக்கு மேல் நீடிக்காது. இவ்வுணர்ச்சியையும் விருப்பத்தையும் கீட்ஸ் வெளியிடும் கவிதையைக் காண்போம்:

Pillowed upon my fair love's ripening breast
To feel forever its soft fall and swell
Awake forever in a sweet unrest
Still to hear her tender heart


அழகார்ந்த என் காதலியின் பழுத்துவரும் மார்பைத் தலையணையாக்கி, அதன் எழுச்சியிலும் வீழ்ச்சியிலும் தோன்றும் இனிமையான இயக்கத்தில் என்றும் அவளிதயத்தின் இதயத் துடிப்பைநான் கேட்பேன்

காதலன் விருப்பம் இது.ஒரு கணநேர மகிழ்ச்சி, எப்பொழுதும், ஆயுள் முழுதும் (forever) நீட்டிக்கவேண்டுமென அவன் விரும்புகிறான். புறவுலகைக் கனவுலமாக அவன் உள்ளம் மாற்றுகிறது. புறவுலகு மாறவில்லை. அவன் உள்ளம் மந்திரத்தால் மாற்றப்படுகிறது.
பாரதியின் கண்ணம்மா பாடல்கள் பல இக்கருத்தினை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளன. புறவுலகிலிருந்து கனவுலகில் ஆழ்ந்து, பின்பு புறவுலகிற்குத் திரும்பும் மனப்பறவையின் சிறகடிப்பும் வேகமும் உயிர்துடிப்பும் மிகுதியாகின்றன.
பாரதியின் 'ஞானரதம்' என்னும் நூலின் மையக்கருத்தும் இதுவே.ஞானரதத்தின் முக்கியமான கதாப்பாத்திரம் ஒரு கவிஞன்.துன்பமயமான புறவாழ்க்கை; ஒரு சிறிய அறை;கிழிந்த பாய்; கணக்குப் பிள்ளை மேசைமீது அடுக்கி வைத்த காகிதக் கற்றை; நோய்வாய்ப்பட்ட மகள்; அடுத்த நாள் வாடகை வாங்க வரும் வீட்டுச் சொந்தகாரர் பற்றிய நினைப்பு; மனைவியின் கவலைக் குரல்; இத்துன்ப உணர்விலிருந்து உறக்கத்தால் கவிஞன் சிறிது நேரம் விடுதலை பெறுகிறான்.அங்கு பல நிலைகளில் கவிஞனுக்கு விருப்பமான வாழ்க்கை இருப்பதாகக் கனவு காணுகிறான். ஞானரதம் வெவ்வேறு உலகங்களுக்குப் பறந்து செல்கிறது. துன்ப நினைவுகள் அகன்று, இன்ப நுகர்ச்சியில் திளைக்கிறான். அற்ப மனிதப் பிறவியை விடுத்து, மேன்மையான தேவனாக மாறுகிறான். சில மணி நேரத்திற்குப் பின்னர் ஏதோ சப்தம்