பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

–- 17 —

”கருவிரன் மந்திக் கல்லா வன்பற
ழருவரைத் தீந்தே னெடுப்பி யயலே
துருகெழு நெடுஞ்சினைப் பாயும்.”

மேலும் இப்புலவர் வேறொரு இடத்தில் அவரையை நிறையத் தின்ற மந்தியின் வயிறு பண்டவணிகரது பை போலத் தோன்றும் என்று கூறி இருப்பதுவும் இன்பம் பயப்பதாகும்.

உண்ட மயக்கம் தொண்டர்க்கும் உண்டு

இது தண்டமிழ் நாட்டுப் பழமொழிகளில் ஒன்றாகும். சிறந்த உணவினே வயிறுபுடைக்க உண்ட பின்னர் மயக்கம் ஏற்படுதல் இயற்கையாகும். இதேபோன்று தேனை உண்ட மந்தியின் மயக்கத்தினைக் கபிலர் பின்வரும் காவியமாகத் தருகின்றார்.

”பழுத்து விளங்கும் பலா மரங்களும் வாழை மரங்களும் நிறைந்த அம்மலையில் அப்பழங்களில் முதிர்ந்த தேன் ஒழுகி, அருகிலிருந்த சுனையில் கலந்தது. இதுகால் கடுவனொன்று அங்கு வந்தது. அதற்கு நீர் வேட்கை அதிகமாகவே தேனென்று தெரியாது அச்சுனைநீரைப் பருகி மயங்கிற்று. அருகில் மணம்கமழும் சந்தன மரம் நின்றது. அதில் ஏறவேண்டுமென்பது அதனது அவா. ஆனால் உண்ட மயக்கம் அதன்மீது ஏறி இனிது தங்குவதற்குத் தடை விதித்தது. எதிர்பாராத இன்பத்தில் மயங்கிய குரங்கு இனிச் செய்வதொன்றும் அறியாது, அங்கேயே தரையில் விழுந்து இனிமையுடன் விளங்கும் பூப்படுக்கையின் மீது துயில்கொண்டது." இதனை விளக்கும் பாடல் கீழே தரப்படுகின்றது.

“கோழிலை வாழைக் கோண்மிகு பெருங்குலை
ஊழுறு தீங்கனி உண்ணுநர்த் தடுத்த