பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

– 18 –

”சாரற் பலவின் சுளையொ டூழ்படு
பாறை நெடுஞ்சுனை விளைந்த தேறல்
அறியா துண்ட கடுவன் அயலது
கறிவளர் சாந்தம் ஏறல்செல் லாது
நறுவீ அடுக்கத்து மகிழ்ந்துகண் படுக்கும்.”

விளையாட்டு வீரர்கள் (Sports men)

விளையாட்டில் விருப்பமுள்ள முசுவின் குருளை பாறையில் மயிலீன்ற முட்டையை அதன் அருமை தெரியாமல் உருட்டி விளையாடும் காட்சியினையும், சிறிய கோலைக் கொண்டு அகன்ற பாறையிடத்து மழையிலுண்டாகிய மொக்குகளை அடித்து இன்புறும் கடுவனையும் இலக்கியத்தில் காணலாம். மேலும் ஆண் குரங்கொன்று மரத்தின் மேலிருந்து பழங்களே உதிர்ப்பக் கீழிருந்து மந்தியும் குட்டிகளும் பொறுக்கிக் தின்னும் எனக் குறுந்தொகையில் புலவர் கூறியிருப்பதும், நெய்தல் நிலத்துக் கடற்கரையில் திரட்டிய உப்பை வண்டியிலேற்றிவிட்டு வீடு திரும்பும் உமணர்கள் உடன் கொண்டுவந்த குரங்குக்குட்டி அவர்களது குழந்தைகளோடு கிளிஞ்சலுக்குள் முத்தைப்போட்டு "கிலுகிலு” ஆட்டி விளயாடும் எனப் பத்துப் பாட்டில் கூறியிருப்பதுவும் படித்து இன்புறுதற் குரியனவாகும்.

மான்

முல்லை நிலத்துக்குரியதாகப் பேசப்படும் விலங்குகளில் மானும் ஒன்றாகும். புலவர்கள் ஆண் மானைக் கலை, இரலை எனவும், பெண் மானைப் பிணையெனவும், குட்டியினை மறி எனவும் வழங்குவர். மேலும் இதனது அடியினை அடும்பின் இலக்கு உவமையாகக் கூறுவர். புள்ளியினை உடைய மான் புகரி என்று வழங்கப்படுகின்றது. புகர்