பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

-- 24 --

ஏற்றனர் மார்பு
கவிழ்ந்தன மருப்புக்
கலங்கினர் பலர்,"

எனக் கலித்தொகைப் பாடலொன்று படம்பிடித்துக் காட்டுகின்றது.

கூரிய கொம்பால் குத்துண்டதால் உடலில் பெருகும் இரத்தத்தால் பிடி வழுக்குமாகையால் மணலால் கையைப் பிசைந்துகொண்டு மாவீரனொருவன் மீண்டும் களத்துள் புகுந்து ஏற்றினே எதிர்த்து வெகு திறமையாகக் கொம்புகளைப் பற்றி அடக்கிக் காளையின் மீதேறி அமர்ந்து கடலில் கலமிவரும் பரதவரைப் போன்று காட்சி அளிப்பான். இது கண்ட ஆயர் வெள்ளம் மகிழ்ச்சியில் குரவைக் கூத்தாடும். அடுத்து வெற்றி வீரனுக்கு மணமாலை சூட்டுவாள் மங்கை. இன்ப வெள்ளத்தில் திளைத்து நிற்கும். வீரன் பகலில் காளையின் கொம்பால் இடியுண்ட உடல் வலியெல்லாம் மறந்து நிற்பான். இவ்வாறு முல்லை நிலத்து மக்களின் வாழ்க்கைக்குத் தேர்வு விளையாட்டாகவும், அதில் வெற்றி பெற்றோருக்குப் பரிசு, காதலாகவும் விளங்கியது வியத்தகு செய்தியாகும். காளைகளை அடக்கி அதன் மீது இவர்ந்த வீரர்களே,

" .........தம் புண்வார் குருதியாற்
கைபிசைந்து மெய்திமிரித்
தங்கார் பொதுவர் கடலுட் பரதவர்
அம்பியூர்ங் தாங்கூர்ந்தா ரேறு,"

என்று பரவையில் படகினைச் செலுத்தும் பரதவர்களுக்கு உவமித்திருப்பது நம் உள்ளத்தினைக் கொள்ளைகொள்கின்றது.