பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



- 56 –

அள்ளும் ஆற்றலுடைய மென்மையான தூவியை உடைய அன்னம், தூது விடும் பொருள்களில் ஒன்றாகும். இது நீர்வாழ் பறவையாகும் மணலிலும் தங்கி இருக்கும்; செந் நெற் கழனிகளிலும் தூங்கும். காதல் செய்வதில் பெருமை வாய்ந்த அன்னம் எப்பொழுதும் துணையுடனே திளத்து மகிழும். குறுகிக் குறுகி மெல்ல நடக்கின்ற தன்மையின் காரணமாய் அன்னத்தின் நடையை இளமாதர் மென் நடைக்கு ஒப்பிடுவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த அந்னம் சங்க இலக்கியத்தில் உண்டு. ஆனால் தற்கால மேடைப் பேச்சாளர்கள் கூறுவதுபோன்று பாலையும் நீரையும் கலந்து வைத்தால் இரண்டையும் தனித்தனியே பிரித்துப் பாலை மாத்திரம் உண்ணும் அன்னம் இல்லை. கஞ்சி தோய்ந்த மல் நீரில் கரைந்து செல்லும் அழகு அன்னத்தின் தூவியை ஒத்திருந்தது என்று தமிழ்ப் புலவர் ஒருவர் பேசுகின்றார். இப்பறவை நெய்தற்குரியதாகப் பலரால் சொல்லப்படுகின்றது. இது மிகவும் உயரத்தில் விரைவாகப் பறக்கும் ஆற்றல் உடையது. இது பற்றியே இதனைக் குதிரைக்கு உவமையாகக் கூறுவர் புலவர்.

பொய்கையில் காதலர்

மணிநிற மலர்கள் மிக்க அழகிய பொய்கையில், அன்னப் பேடையொன்று தன் சேவலோடு, இன்பமாக விளயாடிக்கொண்டிருக்கையில், சேவலன்னத்தை அகன்ற தாமரை இலை மறைத்தது. தன் காதலனைக் காணாத அன்னப்பேடையாகிய காதலி கதுமெனக் கலங்கி செய்வதறியாது நின்றது. அது கால் விண்ணில் விளங்கிய வெண்ணிலவின் நிழலுருவம் பொய்கை நீரில் எதிரொளி செய்யவே, அதனைக் கண்ட பேடை அதனைத்தன் காதலனாகத் தவறாகக் கருதி, மகிழ்வோடு அதைச் சேருதற்கு