பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. இந்தியாவில் விலங்குகளும் பறவைகளும்

நம் தாயகமாகிய இந்தியா ஒரு நாடா ? கண்டமா? எவ்வகையில் அதனைச் சேர்ப்பது? சிமித் போன்ற புலமை சான்ற வரலாற்றுப் பேரறிஞர்கள் தத்தம் நூற்களில் இந்தியாவினை ஒரு துணைக் கண்டம் என்றே குறித்துச் சென்றுள்ளனர். இந்தியாவினை ஒரு துணைக்கண்டம் எனில் அது முக்காலும் உண்மை. ஒரு துணைக்கண்டத்திற்கு வேண்டிய அத்தனை தகுதிகளும் இந்தியாவுக்கு உண்டு.

தெற்கே பல கோடி மைல் பரப்புள்ள நாட்டை விழுங்கிக் கைகொட்டி ஆர்ப்பரிக்கும் குமரிக் கடல்; வடக்கே வான் முட்டும் இமயம்; இடையிலே வற்றாத கங்கை, வளம் பொழியும் காவிரி, பொன் கொழிக்கும் கோதவரி கிருட்டின பாயும் நிலம், தேனொழுகும் பழமுதிர் சோலைகளும், கண்ணாடி நீரோடைகளும், பளிங்குத் தடாகங்களும் வண்ணப்பூக்களும் நிரம்பி உலகையே கவரும் காசுமீர். இவையனைத்தையும் தன்னகத்தே செறியப்பெற்று தெற்கு வடக்காக இரண்டாயிரம் மைலும், கிழக்கு மேற்காக ஆயிரத்து எழுநூறு மைலுமாகப் பரந்து விரிந்து காட்சியளிக்கிறது.

இவை மட்டுமல்ல. இந்தியத் துணைக்கண்டத்திலே பல்வேறுபட்ட மொழியினங்கள், மொழிகள், அவற்றைப் பேசும் மக்கள் உள்ளனர். பல்வேறுபட்ட காலநிலை உண்டு. வேறுபட்ட பறவைகள், விலங்குகள் ஆகியவையும் வாழ்கின்றன.

இமயத்திலே ஒரு வகைப்பறவை, தமிழகத்திலே ஒருவகைப் பறவை. கங்கை நதி தீரத்திலே ஒரு வகை மான்,