பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
- 69 -

2. மத்திய இமயமலைப்பகுதி சட்லெஜ் நதியின் கிழக்கே அமைந்திருக்கும் இப்பகுதியில் மழையதிகம்; நீர்க்கசிவும் அதிகம். இமயமலைப் பகுதியில் வாழும் எல்லா விலங்குகளும் இங்கே வாழ்ந்தாலும் ஆட்டினத்தில் சில அருகிக்கொண்டே வருகின்றன. பழுப்பு நிறமுள்ள கரடியும் இப்பகுதியில் காணப்படுவதில்லை. ஆனால் இங்கு சிறுத்தைகள், புலிகள் அதிக அளவில் உள்ளன.

3. கிழக்கு இமயமலைப்பகுதி : மான்களும், கருப்புக் கரடிகளும் இப்பகுதியில் ஏராளமாக வாழ்கின்றன. சிறுத்தைகளும் இங்கு உண்டு. மலையடிவாரத்தில் புலிகளையும் யானைகளையும் காணலாம். கிழக்குப் பகுதியில் ஒரு கொம்புடைய பெரிய காண்டாமிருகங்கள் வாழ்கின்றன.