பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
- 74 –

புடைய ஏரி ஒன்றினைக் காணலாம். நீர் நிறைந்தால் கொக்கும் நாரையும் கரு நாரையும் அதன் இனத்தைச் சேர்ந்த பறவைகளும் நீர் நிலைகளுக்குச் செல்லல் இயற்கை. இந்த ஏரியும் விதி விலக்கல்ல. ஏரியில் நீர் நிறைந்ததும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பறவைகள் செல்லுகின்றன. ஏரியின் உள் உள்ள மரங்களில் கூடுகட்டி குஞ்சு பொறிக்கின்றன. நாற்பது ஆண்டுகளாக இம்மாதிரி நடைபெறுவதால் அப்பறவைகளையும் அவற்றின் கூடுகளையும் அங்குள்ள கிராமத்தினர் பாதுகாக்கின்றனர். இப்பாதுகாப்பினில் அக் கிராமத்தினர் பலனும் பெறுகின்றனர். ஆயிரக்கணக்கான பறவைகள் தங்கிக் கழிக்கும் மலங்கள் ஏரி நீருடன் கலப்பதால் ஆயக்கட்டு நிலங்கள் அதிக விளைவையும் தருகின்றன. வேறு உரமே தேவையில்லாத நிலையும் ஏற்படுகின்றது. பறவைப் பராமரிப்பும் பாதுகாப்பும் ஒருபுறம் நடைபெறும்போது, பயிர் விளைவின் மிகுதியும் காண்கின்ற நிலை காணும்போது பறவைகளால் நாம் அடையும் பெரும் பயன் நன்கு தெளிவடைகின்றது.

உரிமை பெறும் முன்னர் இந்நிலை என்றுல் உரிமை பெற்றபின் விலங்கு, பறவைப் பாரமரிப்பு, பாதுகாப்பு இவைகளூக்கு நம் அரசினர் செய்துள்ளதென்ன? இரண்டாம் உலகப் பெரும் போரின் விளைவால் ஏற்பட்ட எண்ணெய்த் தட்டுப்பாடு நீக்கக் காடுகள் அழிக்கப்பட்டன. உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டதால் உயிரினங்கள் வாழும் காடுகள் உணவுப் பொருள் உற்பத்திக்காக உபயோகப்படுத்தப்பட்டன. இவற்றில் வனவிலங்குகள் பாதிக்கப்பட்டன. எனவே நாடு உரிமை பெற்ற காலத்தில் வனவிலங்குகள் மறையும் பொருளாய் மாற ஆரம்பித்தன. இந்நிலை மாற அரசினர் சட்டம் இயற்றினர். காட்டுநீர்வாரக்கொள்கையினைச் செம்மைப்படுத்தினர். 1952 ல் மத்திய வனவிலங்குப் பரா