பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

வரர் என்ற பெயர்கள் வைணவத்தில் உள்ளனவே, இவை திருப்பதி-திருமலைத் திருமாலைக் குநிக்காவா?-என்று கேட்டேன்- அதற்கு அவர் கூறியதாவது:- வேங்கடேசன், வேங்கடேசுவரர் என்பன வைணவப் பெயர்கள் அல்ல; அவை சைவப் பெயர்கள்: ஒரு காலத்தில் சைவக் கோயிலாயிருந்த திருப்பதி-திருமலைக் கோயில் பின்னர் வைணவக் கோயிலாக மாற்றப்பட்டது என்று சொல்கி றார்கள்; வைணவத் தலைவர் இராமாநுசர். தமது ஆத்ம சக்தியால் அந்தக் கோயிலின் வருவறைக்குள் உள்ள தெய்வத் திருமேனியில் சங்கு சக்கரத்தைப் பதித்துவிட்டதாக ஒரு செய்தி கூறப்படுகிறது-என்றெல்லாம் தெரிவித்தார்: நண்பர் காந்தாளன் மேல் வைணவர் யாரும் போர் தொடுக்க வேண்டா என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இதற்கு மேல் இன்னும் என்ன சொல்ல வேண்டும்? சரி, இன்னும் சொல்வாம்.

சிக்கல்

மற்றும் ஒரு செய்தி கவனிக்கத் தக்கது. திருவயிந்திரபுரத்தைப் பற்றியோ-திருவரங்கத்தைப் பற்றியோ மாறு பட்ட செய்திகள் இல்லை. திருவேங்கடத்தைப் பற்றி மாறு பட்ட செய்திகள் பலரால் சொல்லப் படுகின்றன வெனில், அங்கு ஏதோ சிக்கல் இருக்கிறது - குழப்பம் உள்ளது - என்பது தெளிவாகவில்லையா? இதை நான் சங்கத்திலும் குறிப்பிட்டேன். இங்கே, 1959 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்க் கலைக் களஞ்சியத்தின் ஆறாம் பகுதியில் 22முதல் 25ஆம் பக்கம் வரை திருப்பதி - திருமலை பற்றித் தெரிவிக்கப்பட் டிருக்கும் செய்திகளுள் சிலவற்றை அங்குள்ளவாறே தருவது நல்லது :