பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 மலர் என்றால் தாமரைதான் மன்னன் என்றால் கரிகாலன் நூல் என்றால் திருக்குறளே எனப்போற்றும் அறப்பனுவல் அளித்திட்டான்; மாந்தரெல்லாம் களித்திட்டார் : விண்முட்டும் மலையோரம்-நம் கண்பட்டும் படாமலும் எழுகின்ற நச்சுமரம்போல் பண்பட்ட தமிழர் வாழ்வில்-முதுகில் புண்பட்ட கொள்கையெல்லாம் மூண்டதந்தோ ! சாதிகளைக் காணாது குறள் ஒலித்த தமிழ் மண்ணில் பாதியிலே வந்ததம்மா பலகோடி சாதிகளும்! அறிவுமணங் கமழ்கின்ற ஆலயங்கள் அற்றுப்போய் ஆயிரம் தெய்வங்கள் உறைகின்ற கோயில்கள் கண்டுவிட்டார். மொழியுணர்வே இல்லாத வாயுணர்வின் மாக்கள்-தமிழ் அழியினும் வாழினும் என்னென்று இருந்திட்டார். அறநெறியே குறிக்கோளாய்த் திகழ்ந்திட்ட |பெருநிலத்தில் பிறநெறிகள் பயிர் செய்தார்; பிழை குவித்தார். மழையற்றுப் போனவயல்போல் மாறிற்றுத் தமிழர் மனம் அழுக்காறு-அவா-வெகுளி-இன்னாச்சொல் நான்குமின்றி நடக்காது வேலையென்று நடந்திட்டார் சில தமிழர் ! பொருளிலார்க்கு இவ்வுலக மில்லையென்று பொருள் குவித்து வளம் செழித்த நாட்டில்-இன்று இருள் கவிந்து வாட்டம் கொடிபோட்ட தங்கே, வாடினாள் தமிழன்னை-சோகப் பாட்டுப் பாடினாள் தமிழன்னை-சுடுநெருப்பில் ஆடினாள் தமிழன்னைஓடினாள்...ஒடினாள்...ஒரு வழியும் கிடைக்கவில்லை : புவியூர் விட்டுப் புகழுரில் வாழுகின்றான்