பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 76 தொடர்புப் பணி புரியுமாறு யான் பணிக்கப்பட்டபோது, எனக்குச் சிறிது நடுக்கம்/தடுமாற்றம் ஏற்பட்டது. அப்போது அவர் தி. மு. க. இயக்கத்தின் ஒரு பெருந்தலை வராய்த் திகழ்ந்தார். அவர் மக்கள் வெள்ளத்தைக் கிளர்ந்தெழச் செய்யக் கூடிய ஈடு இணையற்ற நோவலர்"; உயிர்த்துடிப்பூட்டுபவர்; திறமை மிக்க அரசியலாளர்; அனைவராலும் மதிக்கப்பட்ட தமிழறிஞர். தூதரகத்தில் இருந்த ஒரே தமிழன் நான். எனவே தூதர் நானே இந்த மிகச் சிறப்பு விருந்தினரை கவனித்தல் வேண்டும் என்று முடிவு செய்தார். திரு. மு. கருணாநிதி போன்|கெலோன் விமான நிலையத்தில் அடக்கமானlமென்வண்ண ஐரோப்பிய உடை அணிந்து வந்து இறங்கினார். அவருடைய மேலங்கி (கோட்) கழுத்து வரை பொத்தான் பொருத்தப்பட்டு இருந்தது. இந்திய உடையாகவே ஆகிவிட்ட இந்த உடுப்பு அதிகார பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றே. ஆனால், எனக்கு இந்த உடை வியப்பைத் தந்தது. காரணம் அவர் தமிழகத்தின் மரபுவழி உடையில் வருவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இந்த நவீன உடை அவர் விரைந்து நடப்பதற்கு உதவியாக இருந்தது. இந்த நேரத்தில் எனக்கு திரு. காமராஜ் நினைவு வந்தது; காரணம் பலமாகக் காற்றடித்த 1966 இல் பீரிட் விமான நிலையத்தில் காமராஜ் தமது வேட்டியைக் கலையாமல் பிடித்துக் கொள்ளப்படாத பாடு பட்டார். இந்திய வகையைச் சார்ந்த தென் அல்லது வட இந்திய வேட்டி நம் நாட்டுக்குச் சரியாக இருக்கலாம். ஆனால் அதை வெளி நாட்டில் பயன்படுத்துவது என்பதை ஒரு காந்திக்கு மட்டும் விட்டுவிடலாம். அப்படிப்பட்டவர்கள் ஆயிரம் ஆண்டுக்கு ஒரு முறைதானே வருவார்கள் !