பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 கருத்தில் மாறுதல் இருந்த போதிலும் கால்மானார் நேரு என்றதும் கண்ணீர் உகுத்தார் கலங்கி அழுதார் காராக்கிரகம் கிடந்த அண்ணா ஆம். நான்சென்ஸ்’ என்ற நேருவை எதிர்த்தவர்காராக்கிரகம் கிடந்தவர்-ஆயினும் அண்ணா காலமானார் நேரு என்றதும் கண்ணிர் உகுத்தார் கலங்கி அழுதார் என்கிறார் கவிஞர் கலைஞர். புரந்தவன் கண்ணிர் மல்க சாவதே மேல் என்று பாடினார் பழைய வள்ளுவர், அவர் வாழ்வே தம் வாழ்வு எனக் கருதும் கலைஞரோ-புதிய வள்ளுவரோ-எதிர்த் தவர்கண்ணிர் மல்க இறப்பதே இறப்பு-சிறப்பு என்று புது அறம் புகல்கிறாரோ? வாழ்க வெல்க! அவர் பேருள்ளம்.!-பேரனைய பேருள்ளம்!