பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

இலக்கியத் தூதர்கள்

யும் ஆளும் அரிய வரம் பெற்றான். விண்ணவரைப் பிடித்து வந்து, தன் நகரமாகிய வீரமகேந்திரத்தில் சிறைவைத்தான். சிங்க முகன் முதலான தம்பியரோடும், பானுகோபன் முதலான மைந்தரோடும் மாண்புற்று விளங்கினான்.

இராமனும் வேலனும்

உலகில் மறம் பெருகி அறம் அருகும்பொழுது இறைவன் தோன்றி, மறத்தினை வேரோடு அறுத்து, அறத்தினைச் சீரோடு நிறுத்துவான் என்பது ஆன்றோர் கருத்தாகும். அதற்கேற்ப அரக்கர்கோன் செய்த கொடுமையால் இராமன் அவதரித்தான். அசுரர் கோன் விளைத்த தீமையால் முருகன் அவதரித்தான். சீதையைச் சிறை மீட்பதற்கு இராமன் வில்லுடன் எழுந்தான். சயந்தன் முதலான வானவரைச் சிறை மீட்பதற்கு முருகன் வேலுடன் விரைந்தான்.இலங்கை வேந்தன் தங்கையாகிய சூர்ப்பணகையே அண்ணன் அழிந்தொழிய வழிதேடினாள். சூரன் தங்கையாகிய அசுமுகியும் தன் அண்ணன் அரசோடொழிதற்கு அடிகோலினாள். அழகே உருவாயமைந்த சீதையைக் கவர்ந்து சென்று தன் அண்ணனிடம் சேர்க்க எண்ணினாள் சூர்ப்பணகை. அதனால் இராமன் தம்பியாகிய இலக்குவனால் மூக்கறுபட்டுத் தமையனிடம் ஓடி முறையிட்டாள்.

அசமுகியும் சூர்ப்பணகையும்

பொன்னாடு துறந்து பொன்னி நாட்டையடைந்த இந்திரன் சிவமணங் கமழும் சீர்காழிப் பதியில் பொழில் ஒன்றையமைத்து,அங்குத் தன் தேவியுடன் தங்கியிருந்தான். தனித்திருந்த அவன் தேவியைச்