பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

இலக்கியத் தூதர்கள்

வெளியிடுவர். இதனைக் ‘காம மிக்க கழிபடர் கிளவி என்பர் இலக்கண நூலார்.

இருதுறைத் தூது

இஃதன்றி அகத்துறைக் கற்பொழுக்கத்தில் நிகழும் பிரிவுகளில் ஒன்றாகத் தூதிற் பிரிவையும் குறிப்பர். பகை தணிக்கும் வினைப்பொருட்டுத் தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்தகறலே தூதிற் பிரிவு என்பர் இலக்கண ஆசிரியர். எனவே தமிழில் உள்ள தூதுப் பிரபந்தங்களையும் தூதுப் பாடல்களையும் பெரும்பான்மை பற்றி இருவகையுள் அடக்கலாம். காதல் பற்றிய அகத்துறைத் தூதெனவும், பகை தணிக்கும் வினைகுறித்து வேற்று வேந்தர்பாற் செல்லும் புறத்துறைத் தூதெனவும் அவற்றைக் குறிப்பிடலாம், அம்முறையில் தூதுப் பிரபந்தங்கள் அனைத்தும் அகத்துறை இலக்கியங்களேயாகும். இந்நூலுள் இருதுறைத் தூதர்களைப் பற்றியும், அவர்கள் ஆற்றிய அருஞ்செயல்களைப் பற்றியும் விரிவாகக் காண்போம்.