பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

இலக்கியத் தூதர்கள்

அதிகாரமொன்றை அமைச்சியலுட் புகுத்தியுள்ளார்.

பிரித்தலும் பொருத்தலும்

‘தூது’ என்னும் சொல்லுக்கு உரைவரைந்த பரிமேலழகர், ‘சந்திவிக்கிரகங்கட்கு’ வேற்று வேந்தரிடைச் செல்வாரது தன்மை’ என்று குறிப்பிட்டார். பொருத்தலும் பிரித்தலுமாய செயல்களின் பொருட்டு வேற்று வேந்தர்பால் செல்லுதற்குரியார் தூதர் என்று கருதினார் அவ்வுரையாசிரியர். பகைவர்க்குத் துணையாயினாரை அவரிற் பிரிக்க வேண்டின் பிரித்தலும், தம் பாலாரை அவர் பிரியாமல் கொடை இன்சொற்களால் பேணிக் கொள்ளுதலும், முன்னே தம்மினும் தம்பாலாரினும் பிரிந்தாரை மீண்டும் பொருத்த வேண்டின் பொருத்தலுமாய செயல்களே யாற்றுவதில் வல்லவராகத் தூதர் இருத்தல் வேண்டும். தன் பகைவரோடு சேராதாரைத் தனக்கு நட்பாக்கிக் கொள்ளும் செயல், தன் நண்பர்க்கு இனியவற்றைச் செய்தலினும் விரைந்து செய்யத் தகுவதொன்றும். இவ்வுண்மையைத் தூதராயினர் நன்கறிந்து பொருத்தல் தொழிலைப் புரிதல் வேண்டு மென்பார் பொய்யில் புலவர்.

‘நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்’

என்பது அவர்தம் பொய்யா மொழி.

மூவகைத் தூதர்

திருவள்ளுவர் தூதரைத் ‘தான் வகுத்துக் கூறுவான், கூறியது கூறுவான்’ என இருவகைப்படுத்