பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

இலக்கியத் தூதர்கள்

முதல் மனைவியாராய பரவையாரைக் கண்டு மகிழும் விருப்பினராய்த் தமது வரவினை அடியார்கள் வாயிலாக அவருக்கு அறிவித்தருளினார். அதற்கு முன்பே சுந்தரர் ஒற்றியூரில் சங்கிலியாரை மணந்த செய்தியறிந்த பரவையார் சினங்கொண்டு மனஞ்சோர்ந்தார். பூம்படுக்கையிற் பொருந்தாது பெருந்துயர் கொண்டு வருந்தினார். அவர் கொண்டது பிணக்கோ பிரிவுத்துயரோ இன்னதென அறியக்கூடவில்லை.

நன்மக்கள் பாவையார் கருத்தைப் பகர்தல்

இவ்வாறு பரவையார் செயலற்று வருந்தும் நாளில் சுந்தரர் திருவாரூர்க்கு வந்த செய்தியைத் தெரிந்தார். அவரது வரவைத் தெரிவிக்க வந்த அடியார்கள் பரவையார் மாளிகையைக் குறுகினர், அது கண்ட பாங்கியர் கதவடைத்து வரவைத் தடுத்தனர். அவர்கள் சுந்தரர்பாற் சென்று பரவையார் நிலையைப் பகர்ந்தனர். அவர் புன் முறுவலுடன் உலகியலறிந்த நன்மக்கள் சிலரைப் பரவையார்பால் தூது விடுத்தனர். அன்னவரும் பரவையாரை அணுகி, இது தகாதெனப் பல வகையான் உலகியல் எடுத்தோதினர். எனினும் அவரது சீற்றம் அகலவில்லை. ‘குற்றம் நிறைந்த அவர் பொருட்டு நீவிர் இத்தகு மொழிகளை யியம்புவீராயின் என்னுயிர் நில்லாது’ என்று வெகுண்டுரைத்தனர். அவ்வுரை கேட்ட நன்மக்கள் அஞ்சி யகன்றனர்; சுந்தரரை யணுகிப் பரவையார் கருத்தை உரைத்தனர்.

தோழர் துயரும் இறைவன் தோற்றமும்

இங்நிலையில் சுந்தரர் துயர்க்கடல் நீந்தும் புணையறியாது உள்ளம் இனைந்தார். பேயும் உறங்கும்