பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தோழர் விடுத்த தூதர்

23

பிறங்கிருள் யாமத்தே உடனிருந்த அடியவர் குழாமெல்லாம் உறங்கவும் சுந்தரர் உறக்கங் கொள்ளாது தனித்திருந்து இறைவனை நினைந்து வருந்தினார்.

“என்னே உடையாய் ! நினைந்தருளாய்
இந்தயாமத் தெழுந்தருளி
அன்னம் அனையாள் புலவியினை
அகற்றில் உய்ய லாம்அன்றிப்
பின்னை இல்லைச் செயல்” என்று
பெருமான் அடிகள் தமைநினைந்தார்.

அடியார் இடுக்கண் தரியாத இறைவன் தம் தோழராய சுந்தரர் குறையை அகற்றுதற்கு அவர் முன் தோன்றினார். நெடியோனும் காணாத அடிகள் படிதோய நின்ற பரமனைக் கண்ட வன்றொண்டராய சுந்தரர் அந்தமிலா மகிழ்ச்சியினால் உடம்பெலாம் மயிர்க்கூச்செறிய, மலர்க்கைகள் தலைமேற் குவிய அவர் அடித்தாமரையில் விழுந்து பரவிப் பணிந்தார்.

பரவையால் தூது செல்லப் பணிதல்

உடுக்கை இழந்தவன் கையைப் போலத் தோழர்க் குற்ற இடுக்கண் தொலைப்பதன்றோ உண்மைத் தோழரின் உயரிய செயலாகும் ! தம்மைத் தோழராகச் சுந்தரர்க்குத் தந்தருளிய பெருமான் நண்பரை நோக்கி, ! “நீ உற்ற குறை யாது?” என்று வினவியருளினார். “திருவொற்றியூரில் அடியேன் நீரே பேரருள் செய்ய நேரிழையாம் சங்கிலியை மணஞ் செய்த சீரெல்லாம் பரவை அறிந்து, தன்பால் யான் எய்தின் உயிர் நீப்பேன் என்று உறுதி பூண்டாள் ; நான் இனிச் செய்வது யாது? நீரே என் தலைவர் ; நான் உமக்கு அடியேன் ; நீர் எனக்குத் தாயிற் சிறந்த தோழரும் தம்பிரானுமாவீர் என்பது உண்மையானால் அறிவிழந்து உளமழியும் எளியே