பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தோழர் விடுத்த தூதர்

25

இறைவனே எழுந்தருளியது போல நீவிர் எய்தியதன் காரணம் யாதோ?” என்று வேண்டினார்.

தூதரின் உரையாடல்

தோழர்க்குத் தூதனாய் வந்த பெருமான், “நங்கையே! நான் வேண்டுவதனை நீ மறுக்காது செய்யின் வந்த காரியத்தை விருப்போடு உரைப்பேன்” என்றார். “நீர் வந்த காரியத்தைக் கூறி யருளும்; அஃது எனக்கு இசையுமாயினும் இயலமாயினும் செயல் புரிவேன்” என்று பரவையார் மறுமொழி பகர்ந்தார். ‘நங்கையே ! நம்பியாரூரர் இங்கு வருதற்கு நீ இசைய வேண்டும்’ என்றார் இறைவன். “மிகவும் நன்று! நும் தகவுக்கு இம் மொழி அழகிதே ! பங்குனித் திருநாளுக்குப் பண்டு போல் வருவாராய் ! என்னைப் பிரிந்து ஒற்றியூரை உற்று, அங்குச் சங்கிலியாற் கட்டப் பெற்றவர்க்கு இங்கொரு சார்பும் உண்டோ ? நீர் இந் நள்ளிருளில் வந்து நவின்ற காரியம் நன்று நன்று” என்று பரவையார் இயம்பினர்.

பரவையார் மறுப்புரை

அவர் மொழிகேட்ட துரதர், “நங்கையே ! நம்பியாரூரர் செய்த குற்றங்களை மனத்திற் கொள்ளாமல் நீ கொண்ட வெகுளி நீங்கி, இருவர் துயரையும் களை வதற்கன்றோ நான் நின்னை வேண்டிக்கொண்டேன்; ஆதலின் நீ மறுப்பது சிறப்பன்று” என்று குறிப்பிட்டார். அது கேட்ட பரவையார் பெருஞ் சினங் கொண்டு, “நீர் இங்கு வந்த காரியம் இஃதேயாயின் நும் பெருமைக்குப் பொருந்தாது; ஒற்றியூரில் மற்றொருத்திக்கு உறுதி நல்கியவர் இங்கு வருதற்குச் சிறிதும் இசையேன்” என்று மறுத்துரைத்தார்.

இ.தூ.—3