பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாதவி யனுப்பிய தூதர்

51

நின்றும் அகன்றான். அது கண்டு மனம் சோர்ந்த மாதவி வண்டியில் அமர்ந்து, தனியே சென்று மனையை அடைந்தாள்.

மாதவியின் கடிதம்

இவ்வாறு இவர்கள் பிரிந்தது இளவேனிற்பருவம். அதனைப் பொதியத் தென்றலும் குயிலின் குரலும் அறிவித்தன. கோவலன் பிரிந்த காரணத்தால் வருந்தித் திரும்பிய மாதவி வானளாவிய மேன் மாடத்து நிலா முற்றத்தில் ஏறியமர்ந்தாள். யாழைக் கையில் எடுத்து இனிய இசையைத் தொடுத்துப் பாடினாள். வெவ்வேறு பண்ணை விரும்பி இசைத்தாள். அவள் உள்ளம் அமைதி இழந்தமையால் இசை மயங்கியது. கோவலனுக்குக் கடிதம் எழுதி அழைக்க வேண்டுமெனக் கருதினாள். மாதவி, சண்பகம், பச்சிலை, கருமுகை, வெண்பூ, மல்லிகை, செங்கழுநீர் ஆகியவற்றால் அடர்த்தியானதொரு மாலையைத் தொடுத்தாள். அவற்றின் இடையே அமைந்த தாழையின் வெண்ணிறத் தோட்டில் பித்திகை (சிறு சண்பகம்) அரும்பை எழுத்தாணியாகக் கொண்டு, செம்பஞ்சிக் குழம்பில் தோய்த்து உதறி எழுதினாள்:

‘மன்னுயிர் எல்லாம் மகிழ்துணை புணர்க்கும்
இன்னிள வேனில் இளவர சாளன்
அந்திப் போதகத் தரும்பிடர்த் தோன்றிய
திங்கட் செல்வனும் செவ்வியன் அல்லன்
புணர்ந்த மாக்கள் பொழுதிடைப் படுப்பினும்
தணங்த மாக்கள் தந்துணை மறப்பினும்
நறும்பூ வாளியின் நல்லுயிர் கோடல்
இறம்பூ தன்று இஃதறிந் தீமின்.’

‘உலகில் உள்ள எல்லா உயிர்களையும் தத்தம் துணையோடு புணர்த்து மகிழ்விக்கும் இளவேனில் அரசாள்