பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்று நீர் சீமான் என்றால் விட்டு விடுமா? 'இவ்வளவு செல்வம் எதற்காக சேர்த்தோம். மனைவி, மக்களும் கூட அனுபவிக்க விடாமல் சேர்த்தோமே. அவர்களுக்குப் பணமுள்ள இடம் கூடத் தெரியாதே'. இந்த இக்கட்டான சூழ்நிலையில்தான் தெய்வத்தின் மேல் நம்பிக்கை வந்தது. - தெய்வமே என்னைக் காப்பாற்று என்று அலறினான் சீமான். பரிசலோட்டி துணிவுடன் சீமானின் தலைமுடியைப் பற்றி இழுத்தபடியே நீந்தினான். . . . - கரையில் இருவரும் அலைகளால் தூக்கி எறியப்பட்டனர். பரிசலோட்டி சீமானைக் கரை மணலில் படுக்க வைத்து, அவர் குடித்த நீரையெல்லாம் வெளியே எடுக்க வைத்தான். சீமானுக்கு நினைவு வந்தபோது பரிசலோட்டி கைகளைக் கட்டியவாறு நின்றிருந்தான். அப்போது சீமானுக்கு பரிசலோட்டி தெய்வமாகத் தோன்றினான். இந்த ஏழைக்குச் சேர வேண்டிய கூலியைக் கூட குறைத்தேனே இவன் காப்பாற்றாவிட்டால் நீரில் மூழ்கி இறந்து போயிருப்பேனே! தெய்வமல்லவா பரிசலோட்டி மூலம் என்னைக் காப்பாற்றியது யமனிடமிருந்து என்னிடம் இருந்த பணமா என்னைக் காத்தது? ஒரே ஒரு வேளை. அதுவும் சாவின் சமீபத்தில் இறைவனை அழைத்ததற்கே இப்படி ஒர் உதவியைப் பெற்றேனே! இந்தப் பணம் ஆற்று வெள்ளம் தன்னுள் அகப்பட்டவரது மனத்தைக் கலக்கியது போல் கலக்கி விட்டதே செல்வம் சேர்க்க எண்ணினேனே தவிர, தெய்வத்தை நினைக்காமல் போனேனே - - ஏழைப் பரிசலோட்டியை நோக்கி தன் இரு கரங்களையும் கூப்பி வணங்கினான் சீமான். "உனக்குப் புதிய பரிசல் வாங்கித் தருவேன். கவலைப்படாதே" என்றான். - செல்வமும் ஆற்று ೧೧67676GuTEು ஆரவாரம் செய்து விட்டு பின் மறைந்து போய் விடும் என்பது இன்றுதான் புரிந்தது. இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 15