பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாப்பிடேன்...' 'பெரியவாளே இப்படி சொன்னா, எப்படி? தங்க பஸ்பம் வாங்கணும்னா, காசு நெறைய வேணும்." 'மணத்தக்காளி கேள்விப்பட்டிக்கியோ?” 'முந்தி எப்பவோ சாப்பிட்டிருக்கேன்." 'மணத்தக்காளி கீரையில், ஸ்வர்ணச் சத்து இருக்கு. நிறைய மணத்தக்காளி கீரை சாப்பிடு...' அந்தச் சமயத்தில் மயிலாப்பூர் பிரமுகர் ஒருவர் தரிசனத்துக்கு வந்தார். பெரியவாளின் அறிவுரையைக் கேட்டுக் கொண்டிருந்த அவர், 'வெங்கட்டரமணா வைத்திய சாலையில் தங்க பஸ்பம் ரெடியா இருக்கு. நானே வாங்கித் தர்றேன்" என்றார், பெரியவா உள்ளத்தை உணர்ந்து கொண்டு. சோகைக்காரருக்கு, அப்போதே ஒரு பாட்டில் ரத்தம் உடலில் செலுத்தப்பட்டாற்போலிருந்தது. "பெரியவாளுக்குத் தங்கமான மனசு என்றவாறே நமஸ்கரித்தார். * . நல்ல காலம் வராமல் போயிடாது ஒரு முதலியார் தரிசனத்துக்கு வந்தார். மிகவும் மனமுடைந்து போயிருந்தார். இனி வாழ்வதில் பயனில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தார். . 'வீட்டில் சம்சாரம், குழந்தைகள் யாரும் என்னிடம் மரியாதையாக நடந்து கொள்வதில்லை. தூக்குப் போட்டுக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.” பெரியவா கோபமாகப் பார்த்தார்கள். "ஓஹோ நீங்க தூக்குப் போட்டுக் கொள்வதற்கு என்னிடம் அனுக்ரஹம் வாங்க வந்திருக்கேள்! அப்படி முடிவு எடுத்திருந்தா... என்னிடம் எதுக்காக வரனும்? வேற யாராவது சிநேகிதாள்கிட்ட போய்க் கேளுங்கோ..." வந்தவர், அழுதார். 'மன்னிக்கணும்..." 30 இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005