பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைகை மொழி தாகம என்பதைக் காட்டுவது 'தடித்தவிரல் வாயில் நீட்டுவதாம் சோகம் என்பதற் கடையாளங்கை தாங்கியே கன்னத்தில் ஊன்றுவதாம்' யோகம் என்பதற்குத் துடைகளின் மேல் இருவிரல் கைசேர்த்து வைப்பதுவாம்' யாவும் மனிதர்கள் கைகளினால் எடுத்துக் கூறுமிவை சைகைமொழி’! பேசாதே என்பதற் கடையாளந்தான் பெருவிரல் உதட்டின்மேல் கூட்டுவதாம் ஈசன்மேல் பக்தியுண் டென்பதற்கு 'இருகரம் கூப்பி வணங்குவதாம் யோசனை என்பது மூக்கின் மேலே பெருவிரல் இருத்தி வைப்பதுவாம்’ பேசாமல் கைகளால் மனிதர்கள்தாம் பேசிடும் அடையாள மொழி இதுவே! கையொன்றை மடித்துத் தலையின் கீழே வைத்திடில் தூங்குவதற் கடையாளமாம் 'ஐயா வா என்பதைக் கைவிரல்கள் அசைவினில் காட்டி அழைப்பதுவாம் கைகளை ஒன்றின்மேல் ஒன்றுபடக் கலந்து வைப்பது கலியாணத்தின் செய்கையாம் இதனைத்தான் 'கைத்தலமென் றியம்பினார் ஆண்டாள்தம் பாசுரத்தில்! வாயிலா ஊமைகள் கைகளினால் வார்த்தைக ளாடுவதைஎன்றும் காண்போம்! ஆய கலைகள் அறுபத்தெட்டில் ஆடற்கலைக் கிது முக்கியமே தேய மெங்கும் நாம் சென்றிடினும் -- தெரிந்த மொழியிந்தச் சைகைகளே! தீயின்னை அறிந்திடும்முன்னர் முன்னோர் தோற்றிய மொழியின்றும் தொடர்கின்றதே! - - முத்து எத்திராசன் 44 இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005