பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொன்ன பேராசிரியர் கல்கி தான், அந்த ஆசிரியர் வீணை பவானி நாவல் தான் கம்போஸ் ஆகிக் கொண்டிருந்தது. அச்சாகி வந்த பக்கங்களைப் பார்த்து கல்கி வியந்து, கூப்பிடு அந்தப் பையனை என்று ஆளனுப்பி சுத்தமான வேலைக்குப் பாராட்டாக 'கல்கி அலுவலகத்தில் ஆசிரியர் குழுவிலேயே மேஜை, நாற்காலி போட்டு அமரச் சொன்னது ஒரு சுவையான வரலாறு. அந்த இளைஞர்தான் 'விந்தன்' என்ற பெயரில் தமிழ் இலக்கியத்துக்குப் பெருமை சேர்த்த நாவலூர் வேதாசலம் கோவிந்தன். எங்கள் பாசமிகு தந்தை! கல்கி'யில் வேலை பார்த்தபோதே புதுக்கோட்டையிலிருந்து வெளியான பொன்னி மாத இதழிலும் நக்கீரன் என்ற பெயரில் 'கண் திறக்குமா?’ என்னும் தலைப்பில் ஒரு கதையை எழுதினார் அப்பா. அந்த மாதிரிச் சிந்தனைகளைக் 'கல்கி வெளியிடுமா என்று அவர் தயங்கியிருக்கலாம். ஆனால் எழுத்தைப் பார்த்து இனம் கண்டு கொண்டார் கல்கி. - 'நீ நம்ம பத்திரிகையிலேயே எழுதலாமே” என்று ஆசிரியர் தந்த ஊக்கத்தில் எழுதப்பட்ட தொடர்கதைதான் 'பாலும் பாவையும் பரபரப்பாகப் பேசப்பட்ட அந்தக் கதைதான் அப்பாவைத் திரைப்படத் துறைக்கு ஈர்த்தது. ஒரு பிரபல திரைப்பட நிறுவனம் அந்தக் கதையைப் படம் எடுக்கிறோம் என்று சொல்லி, வருந்தி அழைத்ததன் பேரில், பத்திரிகை வேலையை உதறி விட்டு, திரைப்பட நிறுவனத்துக்குப் போனார். தன்னுடைய கதையை தன் பெயரில் இல்லாமல், ............. கதை இலாகா' என்கிற பெயரில் எடுக்கப் போகிறார்கள் என்றறிந்து, தன்மானம் இடம் தராமல் மறுநாளே வெளியே வந்தார் அப்பா. - 'கல்கி'யை விட்டு விலகியபோதே அதிபர் சதாசிவம் தடுத்துப் பார்த்திருக்கிறார். 'விந்தன் .............. அவர் அழைக்கிறார் என்று சினிமாவுக்குப் போக விரும்புகிறீர்க்ள். அங்கே போனால் கார், பங்களா, வசதிகள் கிடைக்கலாம். ஆனால் உங்கள் எழுத்தில் இருக்கிற ஜீவன் போயிடும். இப்போ கூட ஒண்ணும் ஆயிடலை. 6 இலக்கியப்பீடம் – அக்டோபர் 2005