பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108


இவை யாவற்றிலும் கண்ணி, கோதை, மாலை, தார் ஆகிய நான்கும் பரவலாகச் சுட்டப்படுவன; சூடப்படுவன. கண்ணியும் தாரும் அரசர்க்கு உரிய சின்னம். கடவுளர்க்கும் இன்றியமை யாது சூட்டப்படுவது. கோதையோ மகளிர் பெயர் கொள்ளும் அளவில் மகளிரோடு ஒன்றியது. பூங்கோதை என்று பெண் களுக்கே பெயராக இடப்படுவதைக் குறிக்கிறேன். இவற்றுள்ளும் தாருக்குத் தனிச் சிறப்பும் தகுதியும் உண்டு. புறத்திணையில் முன்னணிப் படையே இப்பெயர் பெற்றது தாரின்றி மன்னன் திருவோலக்கத்தில் அமரான்; காட்சி நல்கான் போர் முகத்தும் சூடாது போகான். அவன் மட்டுமென்ன? அவனது வீர முரசம் தார் அணி வித்த சிலைத்தார் முரசம்” . போர் யானை 'விரி தார்க் கடும்பகட்கு யானை' 178 குதிரை 'தார் உடைப் புரவி 117 . கடவுளர்க்கும் தார் சிறப்பாகச் அணியப்பட்டு உரியதாகக் கூறப்படும். சிவபெருமானுக்குக் கொன்றைத் தார் சுவல் புரளும்' 178 . "கார்க் கடம்பந் தாரான்” 179 முருகன், திருமால் 'பொலந்தார் மார்பின் நெடியோன்'T8 . அகத்திணையில் தார் புணர்ச்சிக்கு உரிய அணி. தாரில் லாது இன்பக் குலாவல் இல்லை என்னும் அளவில் தார்புணர்ச்சிச் சின்னமாயிற்று. 'தார் அணிந்த எழிலிய'18" எனத் தார் தலைவனுக்கு எழில் ஊட்டியது. மார்பில் அணிந்த தாரைக் கண்டே நெஞ்சம் நெகிழ்ந்து காதல் கொள்வாராம். நெஞ்சைக் கொடுத்த ஒருத்தி தாரும் கண்ணியும் காட்டி ஒருமை நெஞ்சம் கொனடமை விடுமோ?’T82 என்கின்றாள். இவ்வகையில் தார் கவர்ச்சி மாலை. புணர்ச்சியின் முயக்கத்தின்போது தார் குழைய வேண்டும். அதுதான் இன்பமாம். அவர்களது இன்பத்தில் நான் குழைவேன். "முகை வாய்த்த முலை பாயக் குழைந்த நின்தார்’188 -எனப்பட்டது. பிரிந்து மீளும் தலைவன் கூடியிருந்தபோது தழுவலால் அவள் பெற்ற உவப்பை, - 175 புறம்: 36 , 12. 180 மது: கா: 69. 176 புறம் : 265 : 7, 8 181 பதிற்: 15 : 1.2 177 புறம். 299, 5 182 நற்: 150 : 8, 9 178 கலி: 1 : 1.1 188 கலி ; 68; 15, 19 சிலம்பு 14:4.