பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/188

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
152

15% -என்று திருத்தக்க தேவர் ஆங்காங்கு தம் நூலில் பின்னர் வந்த பெருங்கதை ஆசிரியர் கொங்கு வேளிரும், “முல்லை அம் கோதை சில் ஆட்டு அணிந்து' என்று கோதை வடிவைக் குறித்தார். அவரே, இது மங்கல அணி என்பதை, 'மங்கல நறுஞ்சூட்டு மரபின் அணிந்து" என்று குறித்தார். 'மரபின் அணிந்து - என்பதால் இவ்வாறு சூட்டுவது மரபு எனவும் காட்டினார். முன்னர் கொற்றவை குமரியாக இருந்து முல்லை வளர்த்த தைக் கண் டோம். முல்லை வளர்த்தவளுக்கு 'முல்லைச் சூட்டு: சூட்டியிருக்க வேண்டுமன்றோ? சூட்டப்பட்டிருந்ததைப் பார்த்த ஒட்டக் கூத்தர், 'முடிச்சூட்டு முல்லையோ; முதற் கற்பு முல்லையோ'8 -என்று பாடினார். அதனையும் முதற் கற்பு’ என்று முதன் முதலில் சின்னமாகச் சூட்டப்படுவதைக் கொண்டு குறித்தார். வாழ்வியல் மரபு தெய்வத்திற்கு ஏறி, ஆன்மிகத்திலும் இடம் பெற்றது. மடந்தையரை மறுப்பவர் சமண மதத்தார். ஆனால் தமது விடு பேற்றிற்குக் கைவல்ய மடந்தை', 'கேவல மடந்தை' என்று மடந்தையாகப் பெயரிட்டனர். அம்மதத்துக் காப்பியமாகிய சீவகசிந்தாமணியில் சீவகன் இறுதியாக வீடு பேறு அடை கின்றான். இதனை அதன் ஆசிரியர் ஒரு திருமண நிகழ்ச்சியாகக் கூறுகின்றார்: கேவல மடந்தை (வீடுபேறு) மணமகளாம்; இப்பெண்ணாம் பொன் ஒரு பாகம்; சீவகன் மணமகன்; அவன் ஒரு பாகம்-எனக்கொண்டு சீவகன் அவளைத் தழுவிக் கொண்டானாம். கண்ணிமைக்காது இன்பத்தை நுகர்ந் தானாம். வீடு பேறு என்னும் மணமகளும் 'முல்லைச் சூட்டு' அணிந்துதான் விளங்குகின்றாள். 1 பெருங் :1; 2:149 8 தக்க : 149, பெருங் : :22, 211 - - « »