பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

153

    "கேவல மடங்கை என்னும்
        கேள்கிளர் நெடிய வாட்கண்
     பூவலர் முல்லைக் கண்ணிப்
        பொன்" 1 -என்பது அப்பாடல்.
  இவ்வாறெல்லாம் முல்லை மலர் மங்கலச் சூட்டிலும் மலர்ந்தது. -
   மண நிகழ்ச்சியில் முல்லை நீங்கா இடம் பெற்றது. மன மகளை முல்லை மலர் மாலையால் ஒப்பனை செய்தனர். முல்லைக் சூட்டுசூட்டியும் கூந்தல் பின்னலை முல்லைத் தொடரால் ஒப்பனை செய்தும், மணமகனுக்கு முல்லைத் தாரை அணிவித்தும், குஞ்சி யில் முல்லைத் தொடரைச் சுற்றியும், காதில் முல்லை மலரைச் செருகியும் மணவறையை முல்லைத் தொடர்களால் அழகுசெய்தும் மண விழாவை முல்லை விழாவாகவே ஆக்கினர்.
   
  மாந்தர் குடும்பத் திருமணம் மட்டுமென்ன? மலர்க்குடும்பத் தில் ஒரு திருமணம் :

மணமகன் : மாலையாகப் பூத்த கொன்றைப் பூ, மணமகள் : குரவம் பாவை விளக்கு : செங்காந்தள் மலர் நீர்வார்த்தது : குருந்த மலர் வாழ்த்துஇசை: சுரும்பு இந்தத் திருமணத்தைப் பேசி முடித்தது யாரென்று நினைக் கின்றீர்கள்? மாந்தரினத்தில் இவ்வேலையைச் செய்யும் முல்லை மலர்தான் பெண்பேசிச் சென்று திருமணத்தை நிறைவேற்றிய தாம்.

  ‘கொடிமுல்லை மகள் மொழிந் தாடச் 

செறிந்த பொன்னிதழ்ப் பைந்தார்க்

   கொன்றையஞ் செல்வற்குக் குரவம் 

அறிந்து பாவையைக் கொடுப்பத்

   தோன்றி அஞ்சுடர் ஏந்த
நிறைந்த பூக்குருந் துகுநீர் -
    பெய்து, ஆர்த்தன சுரும்பே'2-மாந்திரினத்தில்

1 சீவ, சி ; 3117 2 சீவ, சி 1568.