பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164


எழுதப்பட்ட இலக்கியங்களில் முல்லைக்கென்று அதன். பெயரால் இலக்கியம் இருக்கின்றது அன்றோ? பத்துப் பாட்டில் 'முல்லைப் பாட்டு முத்துப் பாட்டு. இது முல்லை என்னும் கற்புத் திறத்தை அடிப்படையாகக் கொண்டது. 'கற்பெனப்படுவது சொற்றிரம்பாமை' என்பதற்கு ஏற்ப, வருவேன்’ என்று சொல்லிச் சென்ற கணவனது சொல்லை நம்பி ஆற்றியிருப்பது முல்லை. கணவனைப் பிரிந்தவள் அவனது கடமைகளை உணர்ந்து பொறுத்திருப்பாள். இது 'கற்பென்னும் திண்மை" எனப்பட்டது. பொறுமை, உறுதி இரண்டையும் உள்ளீடாகக் கொண்டது முல்லை. 'இல்லிருத்தல் முல்லை’ என்பது இலக்கணம். இதனை உரிய பொருளாகக் கொண்டது இந்நூல், இந்நூலில் முல்லைப் பூவைப்பற்றிய ஒரே ஒரு செய்தி உண்டு. அது குறிசொல்வதற்கு முல்லைப் பூ பயன்பட்டதைக் குறிக்கின்றது. முன்னர், மணமக்களை வாழ்த்துவதற்கு முல்லை யொடு நெல்லையும் கொண்டதைக் கண்டோம். அது போன்றே முல்லையையும் நெல்லையும் ஒரு நாழிப் படியிலே கல ந் து வைத்துக்கொண்டு இரண்டு விரல்களால் எடுத்துச் சிதறப் போட்டு அதில் அமையும் முல்லை, நெல் எண்ணிக்கையைக் கொண்டு வருங்கால நிகழ்ச்சியைக் கூறுவர். (இது இக்காலத்து எண் சோதிடம்-NUMERALOGY- போன்றது.) இதனை முதுமை யடைந்த பெண்கள் செய்வர். இது விரிச்சி எனப்படும். 'நெல்லொடு நாழிகொண்ட நறுவி முல்லை அரும்பவிழ் அலரி தூஉய்க் கைதொழுது பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப?1 -என இந்நூல் தெரிவிக்கின்றது. மேலும் இந்நூலால் அறியப்படும் வழக்குகள் பல. பேரும் புகழும் . முல்லைப் பெயரால் 'முல்லைப்பாட்டு' நூல் எழுந்தது போன்று முல்லைப் பெயர் கொண்ட புலவர் பட்டியலும் உண்டு. அள்ளுர் நன்முல்லையார் 1 ல், ப. 8-11