பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172


இசைத்தமிழிலும் முல்லை இசைத்து மணக்கிறது; இசை நாட்டு கின்றது. இதன் இயல்பான சிறப்பை எல்லாம் கவிதையில் நிறுத்தி முல்லையை வினவி முடிவுக் கட்டலாம். என்ன முடிவு? ஏன்சிரித்தாய் 'களுக் கெனவே முல்லாய்! எழிற்குமரி கைவளர்ப்போ சொல்லாய்? தான்சிரிக்கும் கூந்தலிலே முல்லாய், தமிழ்க்குமரன் சூட்டியதோ சொல்லாய்? தேன்சிரிக்கும் மணமதனால் முல்லாய், திருமணமாம் சொல்லளித்தாய் நல்லாய்! "நான்சிரித்தேன் கற்பெனுமோர் சொல்லை நாட்டியதால்” எனும்விடையோ சொல்லாய்? புன்முறுவல் பூவையர்க்கே பல்லாய்ப் பொலியவைத்த புதுமையென்ன சொல்லாய்! சின்னமலர் நீ, முல்லாய், வாழ்த்தும் சின்னமெனச் சீர்பெற்றாய் முல்லாய்: வண்ணமெனும் தமிழிசையை முல்லாய்; வாரிக்கொண்டாய் தாளமிட்டே, நல்லாய்! "தென்பாங்கு வாழ்வு மலர் முல்லாய் திண்ணமாய் நா, னென்றே சொல்வாய்!