பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/248

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
212


பரதவருடைய பிள்ளைகளாகிய 'கருத்தொழில் களிமாக்கள் புனல் ஆம்பல் பூச்சூடினர்'1 உணவாகவும் அணியாகவும் உதவியமை போன்று உடை யாகவும் உதவிற்று. பல மலர்களுடனும் தனி ஆம்பலாகவும், இவைகளுடனும் ஆடைபோலத் தொடுத்துத் தழை ஆடையாக உடுத்தினர். இல்லறம் பேணும் குலமகளிரும், பரத்தையரும் உடுத்தினர் தாம் உடையாக உடுத்த தழை உடைகளை எண்ணி எண்ணி மகிழ்ந்தனர். ஒர் ஊர் சுற்றிப்பரத்தை. இத்தகையவர் கொண்டி மகளிர் எனப்படுவர். தற்காலத்தும் கட்டுப்பாடின்றி அலையும் ஊத்தைப் பெண்களைக் கொண்டிமாடு போலச் சுற்றுகிறாள்' என்பர். இவளும் இத்தகைய தழை ஆடை உடுத்தியவள். இவள் கணுக்காலுக்குக் கீழ் உடுத்தியவள். இவள், நீர்ப்பரப்பிற்குக் கீழே உள்ள குவளை அரும்பு களைப் பறித்தாள். அவ்வரும்புகளை நன்றாக நெருங்கப் பொருந்துமாறு கட்டினாள். நீண்டு தொங்கும் அளவு தழை உடையாக்கினாள். கால்விளிம்புவரை-வடிம்பு வரை விழுமாறு அடைவாக உடுத்திக்கொண்டாள். இதனை, 'நீர்நனை மேவா நெடுந்தொடர்க் குவளை வடிம்புற அடைச்சி நடந்ததைக் கண்டு பின்னே ஒடிய காளையர் பலர், குலமகளிர்க்கு இன்ப காலத்திலும் துன்ப காலத்திலும் துணை நிற்பது வெள்ளாம்பல் மலர். குமரியாகக் கும்மென்றிருக் கும் போது தனது காதலன் கண்ணிற்கு விருந்தாக வெள்ளாம்பல் மலர்களாலேயே தழை ஆடை உடுத்துவாள். அவன் இயற்கை யெய்தியபின் அவள் கைம்பெண்ணாவாள். அப்போது உண்னும் உணவாக வெள்ளாம்பல் அரிசி உதவும்,